India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் ஜூலை மாதத்திற்கான “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” முகாம் அரியலூர் தாலுகாவில் ஜூலை.19 முதல் ஜூலை.20 வரை நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு அரசின் நலத்திட்டங்கள், சேவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வர். இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுவை ஜூலை.19 மாலை 4.30 மணிக்கு அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-I தேர்வுகள் நாளை 07 தேர்வு கூடங்களில் 2,551 தேர்வாளர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பேருந்து வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் வண்டல், களிமண் எடுக்க அனுமதி வழக்கப்பட்டுள்ளது. அதன்படி நீர்வளத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 84 ஏரி, குளங்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள 883 ஏரி, குளங்கள் மண் எடுக்க தகுதி வாய்ந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. மண் எடுக்க விரும்புவோர் https://www.tnesevai.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர், குன்னம் சட்டமன்ற தொகுதி, செந்துறை பெரியார் நினைவு சமத்துவபுரம் சமுதாயகூடத்தில் ஊரகப்பகுதிகளில் மக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் சென்று சேரும் வகையில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை அமைச்சர் சிவசங்கர் இன்று (11.07.2024) துவக்கி வைத்து, பார்வையிட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம் அரியலூர் வட்டத்தில் 19.07.2024 அன்று காலை 9.00 மணி முதல் 20.07.2024 காலை 9.00 மணி வரை ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறைசார்ந்த அரசின் அனைத்து நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
அரியலுர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்போருக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.100, 10 ஆம் வகுப்பு தேர்ச்சி ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் https://tnvelaivaaippu.gov.in இணையதளத்தில் ஆக.30 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மைய அலுவலகத்தில் நாளை(ஜூலை.12) 18 – 35 வயதுடையவர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 300 க்கும் மேற்பட்ட காலிபணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் விண்ணப்பிக்க விரும்புவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in இனையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 94990 55914 எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தோர் தமிழ்ச்செம்மல் விருது பெற, தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்திலிருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து ஆக-08 ஆம் தேதிக்குள் தமிழ்வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 472 நியாய விலைக்கடைகளிலும் கடந்த ஜீன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பாக்கெட்டுகளை பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு அதனை ஜீலை மாதம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, ஜீன் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயிலை பெறாத குடும்ப அட்டைதாரர்கள் அதனை ஜீலை மாதத்தில் நியாய விலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பில்லாமல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு, வரும் 12-ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா கேட்டுக் கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.