Ariyalur

News July 16, 2024

அரியலூர்: எம்பி திருமாவளவன் கூறிய கருத்து

image

தனது தந்தையின் 14-வது நினைவு நாளையொட்டி நேற்று அரியலூர் அருகே செந்துறை அடுத்த அங்கானூரிலுள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு, விசிக தலைவர் தொல். திருமாவளவன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளி என சொல்லப்பட கூடியவர் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளார்.பொதுவாக என்கவுண்டர்,தூக்கு தண்டனை கூடாது என்பது தான் விசிகவின் நிலைப்பாடாகும் என்றார்.

News July 16, 2024

பட்டம் வென்ற மாணவிக்கு எம்.எல்.ஏ பாராட்டு

image

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, உடையார்பாளையத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மகள் சர்வாணிகா செஸ் விளையாட்டில் பல்வேறு நாடுகளில் விளையாடி பரிசுகளையும், பதக்கங்களையும் வென்றுள்ளார். இந்நிலையில் செஸ் விளையாட்டில், FIDE ‘Women Candidate Master’ பட்டத்தை வென்றதை முன்னிட்டு, இன்று ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

News July 15, 2024

நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ள கிராமங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2023-2024 ஆம் ஆண்டு நவரை பருவத்தில் சாகுபடி செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்காக காடுவெட்டி, பிள்ளைபாளையம், முட்டுவாஞ்சேரி, குழுமூர் மற்றும் தூத்தூர் ஆகிய இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வரும் 17-ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளதாகவும், இந்த வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

News July 15, 2024

ரூ.51.59 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகள்

image

அரியலூர் மாவட்ட கூட்டுறவுத்துறையின் மூலம் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் இன்று வழங்கினார். உட்கோட்டை, வாரியங்காவல் இலந்தை கூடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் அரியலூர் தொடக்க கூட்டுறவு வங்கி சார்பில் சுய உதவி குழு கடன் தனிநபர் கடன், மாற்றுத்திறனாளி கடன் என 14 நபர்களுக்கு மொத்தம் ரூ.51.59 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

News July 15, 2024

பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை

image

அரியலூர் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் வாயிலாக நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இன்று வழங்கினார். இதில் மிஷன் வாட்சலயா திட்டத்தின் கீழ் தாய் தந்தை மற்றும் தந்தையை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.4,000/- வீதம் 206 குழந்தைகளுக்கு மொத்த கூடுதலாக ரூ.47,76,000/- நிதி ஆதரவு திட்ட தொகையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

News July 15, 2024

மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்

image

அரியலூர் மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டிலுள்ள 84 ஏரி-குளங்கள், ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டிலுள்ள 883 ஏரி-குளங்கள் மண் எடுக்க தகுதி வாய்ந்ததாக கண்டறியப்பட்டு இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. தனிநபரின் பொது பயன்பாட்டுக்கு வண்டல், களிமண் எடுக்க விரும்புவோர் https://www.tnesevai.tn.gov.in என்ற வலைத்தளம் வாயிலாக விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 15, 2024

மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்

image

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியர் ஜா. ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 75 மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News July 14, 2024

போக்குவரத்து துறை அமைச்சருக்கு பாராட்டு

image

அரியலூர் மாவட்டம் சார்பாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பொறுப்பாளராக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் நியமனம் செய்யப்பட்டார். கொடுக்கப்பட்ட பணியை மிகச்சிறப்பாக செய்து திமுக வேட்பாளர் சிவாவின் மாபெரும் வெற்றியை உறுதி செய்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

News July 14, 2024

மணல் குவாரி அமைக்க நினைவு ஆர்ப்பாட்டம்

image

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தா-பழூரில் நினைவு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. வாழைக்குறிச்சி கிராமத்தில் மாட்டு வண்டி மணல் குவாரி அமைத்துத் தர வேண்டி மாட்டு வண்டி ஓட்டுனர் நலச்சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் ஸ்டாலின் தலைமையில் தா-பழூர் அண்ணாசிலை அருகில் நினைவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

News July 13, 2024

அரியலூர்- ஹாக்கியில் மதுரை அணி சாம்பியன்

image

அரியலூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.  இறுதிப்போட்டியில் மதுரை திருநகர் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்றது. 2ம் இடம் தஞ்சாவூர் செயின்ட் அந்தோணிப் பள்ளி, 3 ஆம் இடம் அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற் கோப்பை சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

error: Content is protected !!