Ariyalur

News September 5, 2024

நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்

image

அரியலூர் மாவட்டத்தில் விளையாட்டு துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் என்றால்www.sdat.tn.gov. in இணையதளத்தில் வரும் முப்பதாம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினவேல் தெரிவித்துள்ளார்.

News September 5, 2024

அரியலூர்- தொழிற் பிரிவு பயிற்சி கட்டணம்

image

அரியலூர் மற்றும் ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மீதமுள்ள பயிற்சியாளருக்கான சேர்க்கை நடைபெறுகிறது. உரிய அசல் சான்றிதழுடன் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் 8,10ஆம் வகுப்பு தேர்ச்சி, +2 மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணத் தொகை ரூ.50, ஒரு ஆண்டு தொழில்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.185, 2 ஆண்டு தொழில்பிரிவு பயிற்சி கட்டணம் ரூ.195 வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News September 5, 2024

அரியலூரில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு

image

அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கு கால அவகாசம் 30.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு 8,10,12ஆம் வகுப்பு தேர்ச்சி/தோல்வி பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப கட்டணம்- ரூ.50/-, தொழில்பிரிவு கட்டணம் ரூ.195ஆகும். மேலும் தகவல்களுக்கு அரியலூர் – 9499055877, 04329-228408, ஆண்டிமடம் – 9499055879 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 5, 2024

மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம்

image

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வாரந்தோறும் புதன்கிழமையன்று நடைபெறும். அதன்படி நேற்று மாவட்ட காவல் அலுவலகத்தில், எஸ்பி செல்வராஜ் தலைமையில் வாராந்திர சிறப்பு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 20 மனுதாரர்களிடம் மனுவைப் பெற்று மேற்கொண்டு நடவடிக்கைக்கு எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

News September 5, 2024

அரியலூர் பாலிடெக்னிக் கல்லூரி முக்கிய அறிவிப்பு

image

கீழப்பழூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் DCE, DME, DEEE, DECE, Diploma in Computer Engineering, Diploma in Agricultural Engineering உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் மாணவர்கள் இன்று மற்றும் நாளை நேரடியாக 2,263 ரூபாய் செலுத்தி சேர்ந்து கொள்ளலாம் என கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

News September 5, 2024

நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்

image

அரியலூர் மாவட்ட விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்கள் வீரர்கள் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 4, 2024

கீழப்பழுவூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் சேர்க்கை

image

கீழப்பழுவூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் civil engineering, mechanical engineering, EEE, ECE, CSE, வேளாண்மை பொறியியல் துறை ஆகிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக கல்லூரியில் 05.09.2024 மற்றும் 06.09.2024 ஆகிய தேதிகளில் விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம் என கல்லுரி முதல்வர் அறிவித்துள்ளார்.

News September 4, 2024

செந்துறை ஆசிரியருக்கு ராதாகிருஷ்ணன் விருது

image

செந்துறை அடுத்த சோழங்குடிக்காடு பட்டதாரி ஆசிரியர் மணிமுத்துக்கு சோழங்குடிக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பல வருடங்களாக தொடர்ந்து 100% தேர்ச்சி, தனியார் பள்ளிக்கு இணையான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவருக்கு ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பள்ளிக்கும் பெருமை சேர்த்த ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிகின்றனர்.

News September 4, 2024

ராணுவ படையில் சேர்வதற்கான கருத்தரங்கு

image

அரியலூர் அரசு கல்லூரியில் இந்திய ராணுவப் படையில் சேர்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் திருச்சி ராணுவ ஆள் சேர்ப்பு, துணை அலுவலர் மேஜர் நீல்குமார் கலந்து கொண்டு பேசுகையில், இளைஞர்கள் அனைவரும் நமது நாட்டை பாதுகாக்கும் பணியில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும், 17 முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்களுக்கென்றே இந்திய அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது தான் அக்னிவீர் திட்டம் என்றார்.

News September 4, 2024

அரியலூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

image

சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தையை காப்போம், கற்பிப்போம் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை சார்பில் இந்துமதி கலந்து கொண்டு, பெண் குழந்தைகளுக்கான நலத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் பெண் குழந்தைகளுக்கு உடல் ரீதியாக தொந்தரவு ஏற்படுத்தினால் 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

error: Content is protected !!