Ariyalur

News October 22, 2024

குழுமூர் புத்தர் சிலை பாதுகாக்கப்படுமா?

image

குழுமூர் கிராமத்தில் உள்ள புத்தர் சிலையை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சில ஆண்டுக்கு முன்பு சமூக விரோத கும்பலால் சிலையின் தலைப்பகுதி வெட்டி கடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் எழுந்துள்ளது. 

News October 22, 2024

அரியலூர் போலீசார் எச்சரிக்கை

image

டெலிகிராம், வாட்ஸ்அப் போன்ற செயலிகள் மூலம் தொடர்பு கொண்டு பகுதி நேர வேலையில் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களின் உண்மையை அறியாமல் நம்பி ஏமாறாதீர்கள் என அரியலூர் போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் முதலில் சிறிய டாஸ்க்கை அனுப்பி அதை செய்தவர்களுக்கு சிறிய தொகை அனுப்புவர். பிறகு பெரிய டாஸ்கை செய்ய முதலீடு செய்ய வேண்டும் என்று மோசடி செய்வர். எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 22, 2024

அரியலூரில் இன்று மின்தடை

image

அரியலூர் மாவட்டத்தில் இன்று (22.10.2024) ஆண்டிமடம், அய்யூர், பெரியகருக்கை, பாப்பாக்குடி ஆகிய நான்கு துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெரும் கிராமங்களுக்கு மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று காலை 09.00 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ஷேர் செய்யவும்

News October 21, 2024

அரியலூரில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க கோரி மனு

image

தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசு மற்றும் விற்பனையை கட்டுப்படுத்த கோரியும் அரியலூர் மாவட்டம் கரைவெட்டி பறவைகள் சரணாலயத்தை ஒட்டி சுற்றியுள்ள கிராமங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க கோரியும் நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மூலம் மண்டல, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

News October 21, 2024

அரியலூர்: பனை நடவு செய்யும் பணி

image

தா.பழூர் அருகே சோழன்மாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் எண்ணெய் பனை திட்டத்தின் கீழ், எண்ணெய் பனை மரக்கன்றுகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் எம்எல்ஏ கண்ணன் கலந்து கொண்டு சோழன்மாதேவி கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் நிலத்தில், எண்ணெய் பனை மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியினை தொடங்கி வைத்தார்.
இதில் வேளாண் துறை மற்றும் கிரீடு வேளாண் அறிவியல் மைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்

News October 21, 2024

உதயநிதி ஸ்டாலின் வருகை ஒத்திவைப்பு

image

அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நாளை (அக்.22) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் துணை முதலமைச்சரின் வருகை தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 21, 2024

அரியலூரில் 2,727 பேர் பதிவு

image

தமிழக முழுவதும் நேற்று திறனாய்வுத் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை அரியலூர் மாவட்டத்தில் மட்டும் 2,640 மாணவர்கள் எழுதினர். இத்தேர்வானது அரியலூர், ஜெயங்கொண்டம், செந்துறை, விளந்தை மற்றும் திருமானூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது. அரியலூரில் மட்டும் 11 மையங்கள் அமைத்து நடத்தப்பட்டு, தேர்வு எழுத 2,727 பேர் பதிவு செய்தனர்.

News October 20, 2024

அரியலூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் அக்டோபர்-20 (இன்று) மற்றும் அக்டோபர்-23 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.20-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஷார் செய்யவும்

News October 20, 2024

அரியலூரில் 4 குற்றவாளிகள் சிறையில் அடைப்பு

image

அரியலூர் அடுத்த தூத்தூர் மற்றும் திருமானூர் போலீசார் இருவேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெயபால், மோகன்ராஜ், பாண்டியன், மணிகண்டன் ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து சுமார் 20 சவரன் நகை (ம) இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இவர்கள் 4 பேரும் அரியலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சங்கீதா உத்தரவின் படி அரியலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

News October 20, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வரும் 23ஆம் தேதி காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்