India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று திருமண சுப முகூர்த்த நாள் என்பதால் பல்வேறு பல்வேறு இடங்களில் திருமணம், காதணி விழா போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் செல்வதற்கு பேருந்துகளில் ஏறுவதற்கு அலைமோதி வருகின்றனர்.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடபடுகிறது. இதனையொட்டி அரியலூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாவின் சிலைக்கு அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மதிமுக நிர்வாகிகளுடன் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட செயலாளர் ராமநாதன் உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
விசிக தலைவர் திருமாவளவன் எல்லா கட்சியையும் தான் அழைக்கிறார், திமுக கொள்கையிலும் இந்த ஒப்புதல் இருக்கிறது, அதிமுகவிற்கும் இந்த ஒப்புதல் இருக்கிறது. அதைப் போல எல்லோருக்கும் ஒப்புதல் இருக்கிறது என்கின்ற பொதுவான கருத்தைத்தான் தெரிவித்து அழைத்துள்ளார். எனவே இதனை முறையாக ஆய்வு செய்யலாம் என அரியலூரில் போக்குவரத்துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் நேற்று தெரிவித்துள்ளார். கருத்துக்களை பதிவிடவும்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 மற்றும் 2A தேர்வு அரியலூர் அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட 29 தேர்வு மையங்களில் இன்று நடைபெற்றது. அரியலூர் மாவட்டத்தில் மொத்தமாக 8761 பேர் குரூப்-2 மற்றும் 2A தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த நிலையில், 6734 பேர் மட்டுமே தேர்வு எழுத வருகை புரிந்ததாகவும், 2027 பேர் வருகை தரவில்லை என தெரிவிக்கபட்டுள்ளது.
புதிய நிர்வாகிகளுக்கான விண்ணப்பங்கள் QR Code மூலம் விண்ணப்பிப்பதில், திருச்சி மண்டல அளவில் அரியலூர் மாவட்டம் முதன்மையாக இருப்பதாக மாநில நிர்வாகிகள் பாராட்டியுள்ளனர். இதற்கான விழா திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், மாநில பொறியாளர் அணியின் நிர்வாகிகள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் வழிகாட்டுதலின் படி மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் கறவை மாடுகளில் கருச்சிதைவு ஏற்படுத்தும், புரூசெல்லோசிஸ் நோய்க்கான 4-ஆவது தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே 8 மாதம் வயதுடைய கன்றுகளுக்கு புரூசெல்லோசிஸ் நோய்க்கான தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரால் உங்களை தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி மற்றும் 19 ஆம் தேதியில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் நாளை(செப்.14) நடைபெற உள்ள குரூப் 2 தேர்வு எழுதுபவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு எழுத வரும் தேர்வர்கள் தேர்வாணையத்தால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வர வேண்டும். அறிவிக்கப்பட்ட காலத்திற்கு பின் வருகை தரும் தேர்வர்கள் எக்காரணத்தை கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் சலவைத் தொழில் செய்யும் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களுக்கு திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்பட உள்ளது. எனவே இதில் பயன் பெற விரும்புவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து விண்ணப்பித்தினை பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள குரூப்-2 தேர்வு எழுதுபவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்யபட்டு உள்ளதாகவும், தேர்வு எழுதவரும் தேர்வர்கள், தேர்வாணையத்தால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வர வேண்டும் எனவும், அறிவிக்கப்பட்ட காலத்திற்கு பின் வருகை தரும் தேர்வாளர்கள் எக்காரணத்தை முன்னிட்டு கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.