India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிதம்பரம் மக்களவைத் தோ்தலையொட்டி அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியர் மற்றும் உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் மண்டல அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஜா. ஆனிமேரி ஸ்வா்ணா தலைமை வகித்து பயிற்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குப்பதிவை உறுதி செய்யும் இயந்திரம் பயன்படுத்துவது குறித்து விளக்கினார்.
அரியலூரில் மக்களவைத் தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து பொறுப்பு அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்ண தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் இருப்பு, சமூக வலைத்தளங்களை கண்காணித்தல், தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள், தேர்தல் செலவினங்கள், தேர்தல் நடத்தை விதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்டம் மணகெதி சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.ஒரு முறை பயணம் செய்ய, ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணம் ரூ.5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் 100 முதல் 400 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் தொகுதியில் பாஜக சார்பில் கார்த்தியாயினி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் விசிக திருமாவளவன், அதிமுக வேட்பாளராக சந்திரகாசன் போட்டியிடுவதால் இத்தொகுதி ஸ்டார் அந்தஸ்து பெற்றுள்ளது. அதிமுக வின் அதிதீவிர விசுவாசியாக திகழ்ந்த கார்த்தியாயினி ஜெயலலிதா மறைந்த பின் ஒரு சில மாதங்களிலேயே பாஜகவில் இணைந்தார். இவர் வேலூர் மாநகராட்சியின் முன்னாள் மேயர்.
அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே கொக்கரணை கிராமத்தை சேர்ந்தவர் ராஜு. கட்டடத் தொழிலாளியான இவர் 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து அச்சிறுமியை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் ராஜுவை போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று(மார்ச்.21) கைது செய்தனர்.
அரியலூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், திருச்சியில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்கும் பிரசார கூட்டத்தில் பங்கேற்பது, சிதம்பரம் மக்களவை தொகுதி தேர்தலில் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக களப் பணியாற்றி, வேட்பாளர் சந்திரகாசன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெறச் செய்வது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர் பெரியகற்கை கிராமத்தை சேர்ந்தவர் விஜயக்குமார். நேற்று(மார்ச்.20) ஆண்டிமடம் – விருத்தாச்சலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம், புதுவையில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சியின் (நாதக) சிதம்பரம் தொகுதி வேட்பாளராக இரா.ஜான்சி ராணி களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினரால், மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 50 இரண்டு சக்கர வாகனங்களை மார்ச் 21-ல் பொது ஏலம் நடைபெறும் என மாவட்ட காவல் துறை அறிவித்திருந்தது. ஆனால் மக்களவைத் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால், பொது ஏலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.