Ariyalur

News October 24, 2024

அரியலூர் மாவட்டத்தில் லஞ்சம் கேட்டால் உடனே அழைக்கவும்

image

அரியலூர் ஏ.டி.எஸ்.பி. ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் தாங்கள் பணி செய்ய லஞ்சம் கேட்டால் 94981 05882 என்ற எண்ணில் கைப்பேசி வாயிலாகவும், katseviadspvacariyalur@gmail.com அஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவித்தால், புகாா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா். ஷேர் செய்யவும்

News October 24, 2024

10 ரூபாய் நாணயத்தை பெற்று கொள்ள கலெக்டர் அறிவிருத்தல்

image

அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் எரிபொருள் நிலையங்கள், வர்த்தக நிலையங்களில் 10 ரூபாய் நாணயத்தை பொதுமக்களிடமிருந்து ஏற்க மறுப்பதாக புகார்கள் வரப்பெற்று உள்ளது. எனவே வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் வர்த்தகத்தின் போது பொதுமக்கள் தங்களிடமுள்ள 10 ரூபாய் நாணயத்தை அளிக்கும் பட்சத்தில் ஏற்க மறுக்காமல் பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி,தெரிவித்துள்ளார்

News October 24, 2024

அரியலூரில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பொருட்டு சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 25ஆம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெற உள்ளது. இதனை வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 23, 2024

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு

image

இரும்புலிகுறிச்சி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் லஞ்ச ஒழிப்பு ஏ டி எஸ் பி ராமச்சந்திரன் தலைமையில் காவல் ஆய்வாளர் கவிதா மற்றும் சிறப்பு காவல் துணை ஆய்வாளர்கள் ரவி பவுன்ராஜ் உள்ளிட்டோர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில் கணக்கில் வராத  5000 ரூபாயை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 23, 2024

அரியலூர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட எஸ்பி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.மனு கொடுக்க வந்த 14 மனுதாரர்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர். பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த எஸ்பி உடனடியாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

News October 23, 2024

அரியலூர் ஆட்சியர் கடும் எச்சரிக்கை

image

அரியலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் செய்து வைத்தாலோ, உதவி புரிந்தாலோ கடும் சிறைதண்டனை விதிக்கப்படும் என்று ஆட்சியர் ரத்தினசாமி எச்சிக்கை விடுத்துள்ளார். மேலும் குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தால், 24 மணி நேரமும் செயல்படும் குழந்தை பாதுகாப்பு உதவி மையத்தை 1098 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். ஷேர் செய்யவும்

News October 22, 2024

அரியலூர் விவசாயிகளுக்கு குட் நியூஸ்

image

முழு மானி யத்தில் வழங்கப்படும் பூச்சி விரட்டிகளை வாங்கி வயல் வரப்புகளில் பயிடலாம் என வட்டார வேளாண் உதவி இயக்குநர் சாந்தி தெரிவித்துள்ளார்.நொச்சி மற்றும் ஆடாதொடா போன்ற பூச் சிவிரட்டிகளை மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தின் முழு மானிய விலையில் அரியலூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் 15,000 எண்கள் விநி யோகம் செய்யப்பட உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை அலுவலர் சந்திக்கலாம்

News October 22, 2024

அரியலூரில் உதவித்தொகை பெற கலெக்டர் அழைப்பு

image

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவடைந்து இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் சுய உறுதிமொழி ஆவணத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கலெக்டர் அறிவுறுத்தல்.

News October 22, 2024

போட்டிக்கான செலவுகளை ஏற்றுக்கொண்ட  அறக்கட்டளை

image

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை சர்வாணிகா, பிரான்ஸ் – போர்ச்சுகல் நாடுகளில் நடைபெற்ற International Chess Championship போட்டியில் இம்மாதம் 10ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பங்கேற்றார். அவரின் விமானப்பயணம், தங்குமிடம், உள்ளிட்ட செலவினங்களை தமிழ்நாடு அரசே ஏற்கும் வகையில், சாம்பியன்ஸ் அறக்கட்டளையில் இருந்து ரூ.5.29 லட்சத்துக்கான காசோலையை அவரது தந்தையாரிடம் துணை முதல்வர் வழங்கினார்.

News October 22, 2024

அரியலூர் கலெக்டர் அழைப்பு

image

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிறப்பு மற்றும் ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெற்றிட மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான விபரங்களுக்கு, சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி அறிவித்தார்.