India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வினை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது .
தா.பழூர் அருகே உதயநத்தம் ஊராட்சியில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். எம்எல்ஏ கண்ணன் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் மக்களவை தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். பானை சின்னத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில், வில்லியனுாரைச் சேர்ந்த துரை என்ற சிற்ப கலைஞரால் பைபர் மூலம் 7 அடி உயரம், 6 அடி அகலம் கொண்ட ஆறு மெகா சைஸ் பானைகள் உருவாக்கப்பட்டு பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சிதம்பரம் மற்றும் குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று நடைபெற்றது. இதனை ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கீழப்பழுவூரில் தோ்தல் பறக்கும் படையினா் நேற்று வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனை மேற்கொண்டதில் அதில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்சென்ற ரூ.89,100 பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், செந்துறை அகரம் கிராமத்தில் நடத்திய சோதனையில் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த நிதி நிறுவனர் இளவரசன்(35) உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ 1,34,230-ஐ பறிமுதல் செய்யப்பட்டது.
இரும்புலிக்குறிச்சி கிராமத்தில் அதிமுக சிதம்பரம் தொகுதி வேட்பாளர் மா. சந்திரகாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் மாவட்ட கழக செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர் ரமேஷ், ஒன்றிய குழு உறுப்பினர் தெய்வமணி ரமேஷ், ஜெயப்பிரகாஷ், சதீஷ், காமராஜ், மணிகண்டன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்..
ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள குறைதீர் புகார் பெட்டியில் பிஏசிஎல் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் நேற்று மனு அளித்தனர். அதில்
மூடப்பட்ட
பிஏசிஎல் எனும் தனியார் காப்பீடு நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு முதலீடு தொகையை திருப்பி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே முதலீடு செய்துள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்ட எல்லையான கொள்ளிடம் ஆறு மதனத்தூர் பாலத்தின் மேல் புறத்தில் அமைந்துள்ள ஆர்எஸ் பதின் மரம் காடு உள்ளது. இந்த இடத்தில் நேற்று (ஏப்.8) திடீரென பற்றிய தீ கொழுந்து விட்டு எரிந்தது. இந்த சம்பவம் கடுமையான வெப்பத்தினால் ஏற்பட்டதா அல்லது யாரேனும் மர்ம நபர்களின் வேலையா என்று தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும்,, பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அரியலூர் நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகில் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு ஒத்திகையினை ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகளை ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா இன்று ஆய்வு செய்தார். உடன் அலுவலர்கள், போலீசார் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.