India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் பிரெய்லி முறையில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து, பிரெய்லி முறைகளில் பயிற்சி பெற்ற நபர்கள் மூலமாக பார்வையற்ற வாக்காளர்களுக்கு இன்று(17.4.2024) பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சியில் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பாக போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை ஆதரித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அரியலூர் மாவட்டம் தா. பழூர் மேற்கு ஒன்றியம் அம்பாப்பூர், விக்கிரமங்கலம், கீழநத்தம், கடம்பூர், குணமங்கலம், சாத்தம்பாடி, முட்டுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அரியலூர் அருகே உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் ஏழைகளின் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. இக்கோவில் ஆண்டு திருவிழா ராம நவமி அன்று தொடங்கி 11 நாட்கள் நடைபெறும். சுயம்பு கலியபெருமாள் சுவாமிக்கு இன்று பூஜைகள் நடைபெற்ற பின்னர் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் ஊர்வலமாக கொடிமரத்திற்கு எழுந்தருளினார். இதனை தொடர்ந்து கருட கொடி ஏற்றப்பட்டது.
அரியலூா் அடுத்த கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோயிலில் வருகின்ற ஏப். 25-ஆம் தேதி திருத்தேரோட்டம் நடைபெறவுள்ளது. தேரோட்டத்தையொட்டி ஏப்.25 ஆம் தேதி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவகங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை ஈடுசெய்யும் வகையில் மே 4-ஆம் தேதி (சனிக்கிழமை) அன்று முழுவேலை நாளாக செயல்படும் மாவட்ட ஆட்சியா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்
திருமானூர் அருகே கரைவெட்டி கிராமத்தில் மான் ஒன்று அடிபட்டு சாலையில் வந்த மானை ஊர் பொதுமக்கள் காப்பாற்றினர். இது குறித்து வெங்கனூர் போலிசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் மானை மீட்டு திருமானூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து உடன் மானை அருகில் உள்ள வனத்தில் வனத்துறையினர் விட்டனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் (தனி) மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவினங்கள் தொடர்பான பதிவேடுகளை தேர்தல் செலவினப் பார்வையாளர் நிதின் சந்த் நெகி முன்னிலையில் இன்று தாக்கல் செய்தனர். மூன்றாம் கட்ட ஆய்வில் 13 வேட்பாளர்களின் சார்பில் அவர்களது முகவர்கள் பங்கேற்று தேர்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்தனர்.
உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதிவு பொருட்களை வாக்குச்சாவடி வாரியாக பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர், தேர்தல் நடத்தும் அலுவலர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்டம், செந்துறையில் சிறுத்தை ஒன்று உலவி வந்த நிலையில், அதை பிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரியலூர் மாவட்டத்தில் இரட்டை சிறுத்தை இருப்பதாக வாட்ஸ் அப்பில் உலா வரும் தவறான செய்தி தொடர்பாக, காவல்துறையில் வனத்துறை சார்பில் புகார் அளித்துள்ளது. இதில் தவறான செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை எச்சரித்துள்ளது.
அரியலூரில் சுற்றிய சிறுத்தை கடலூர் அல்லது பெரம்பலூருக்கு இடம் பெயர்ந்திருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. நின்னியூரில் சிறுத்தை கால்தடம் பதிவாகி இருந்த நிலையில்அதை பிடிக்க 3 கூண்டுகள் வைக்கப்பட்டன. 3 இடங்களில் கூண்டு வைத்தும் சிறுத்தை சிக்காத நிலையில் வேறு பகுதிக்கு சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பெரம்பலூர், கடலூர் ஆற்றுப்படுகைகளில் வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஜெயங்கொண்டத்தைச் சோ்ந்தவா் சூா்யா(23) அப்பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடைக்கு வந்த இருவர் 4 கிராம் மோதிரத்தை வாங்குவது போல் நடித்து அதனை திருடிச் சென்றனா். இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று முன்தினம் திருத்துறைப் பூண்டி, கட்டிமேடை சோ்ந்த குபேந்திரன்(42), கோட்டக்குடி கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் மனைவி தனலட்சுமி(42) ஆகியோரை கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.