Ariyalur

News October 26, 2024

அரியலூர்- எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 29ம் தேதி மாலை 4.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

News October 26, 2024

அரியலூர்- பேருந்துகளில் எவ்வாறு முன் பதிவு செய்வது

image

தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்பதிவு செய்து சிரமமின்றி பயணிக்கலாம் இதற்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்

எனவே, பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மொபைல் ஆப் (Mobile App) Android / I phone கைபேசி மூலமாகவும் முன் பதிவு செய்து கொள்ளலாம் என கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார்

News October 26, 2024

அரியலூர்- மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற அழைப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. அரியலூர் ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் 29ம் தேதி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடக்கும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News October 26, 2024

போதைக்கு எதிரான விழிப்புணர்வு குறும்படம்

image

அரியலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் விளம்பர வாகனத்தின் மூலம் உடையார்பாளையம் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டது. போதை இல்லாத தமிழ்நாடு போதையை தவிர்ப்போம் மகிழ்ச்சி பாதையில் நடப்போம் என்ற கருத்தை மையமாகக் கொண்டு போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதை பொதுமக்கள் பார்த்து விழிப்புணர்வு அடைந்தனர்.

News October 26, 2024

அரியலூர் மாவட்ட மக்களின் கவனத்திற்கு

image

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்து வசதிகள் குறித்து கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி அறிவித்துள்ளார். இதில், அதில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கும்பகோணம் , தஞ்சாவூர், மற்றும் பட்டுக்கோட்டைக்கு நடைமேடை 9-லும், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் நடைமேடை எண் -8-லும் பேருந்துகள் நிற்கும் என தெரிவித்துள்ளார்.

News October 26, 2024

இ-நாம் திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை

image

அரியலூர் மாவட்ட விவசாயிகள், இ-நாம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வீட்டுக்கே வந்து விளை பொருட்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமியிடம் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

News October 26, 2024

அரியலூர்:  கால்நடை கணக்கெடுப்பு எதற்காக?

image

அரியலூர் மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு தொடங்கியுள்ளது. கால்நடை கணக்கெடுப்பின் அவசியம் குறித்து மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். கால்நடைகளுக்கு எதிர்காலத்தில் தேவைப்படும் தீவனங்கள், நோய் தடுப்பூசிகள், மருந்துகள் போன்றவை உற்பத்தி செய்ய இயலும். இயற்கை சீற்றங்களால், கால்நடைகள் பாதிக்காமல் தடுக்கவும் மீறி பாதிக்கப்பட்டால் உரிய நிவாரணம் அளிக்கவும், இக்கணக்கெடுப்பு அவசியம் என தெரிவித்தார்

News October 26, 2024

அரியலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கை கால் பாதிக்கப்பட்டோர், செவித்திறன் குறையுடையோருக்கு கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்கள் உள்ளிட்ட பிரிவுகளில் வழங்கபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் awards.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்தும், கோரப்பட்ட விவரங்களை இணைத்தும் அக்-30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News October 25, 2024

அரியலூர்- வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் குறித்த அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த நபர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பாக தகவல் தெரிவிப்போர் வழக்கு பதிவு செய்தல் மற்றும் தீர்த்தங்கள் தொடர்பான முறையீடுகளை 18002021989 அல்லது 14566 என்ற உதவி எண்ணை அழைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இரத்தின சாமி தெரிவித்துள்ளார்.

News October 24, 2024

அரியலூர் மாவட்டத்தில் லஞ்சம் கேட்டால் உடனே அழைக்கவும்

image

அரியலூர் ஏ.டி.எஸ்.பி. ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் தாங்கள் பணி செய்ய லஞ்சம் கேட்டால் 94981 05882 என்ற எண்ணில் கைப்பேசி வாயிலாகவும், katseviadspvacariyalur@gmail.com அஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவித்தால், புகாா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா். ஷேர் செய்யவும்