Ariyalur

News September 18, 2024

சிங்கப்பூர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அரியலூர் கவிஞர்

image

நேற்று மாலை சிங்கப்பூர் மண்ணில் ”சொல்லாடும் முன்றில் “அமைப்பின் சார்பாக நிகழ்ந்த மூன்றில் கவியரங்கத்தில் கல்லும் பாடாதோ கவி என்கிற தலைப்பில் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்வில் செந்துறை ஒன்றியம் உகந்தநாயகன் குடிக்காட்டை சேர்ந்த கவிஞரும் எழுத்தாளருமான சி. கருணாகரசு அவர்கள் தலைமை ஏற்று தனது படைப்பையும் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

News September 18, 2024

கொலை முயற்சி வழக்கு: 2 பேரை தேடும் போலீசார்

image

செந்துறை அருகே மணல் கடத்தலை தடுக்கும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தளவாய் காவல் நிலைய காவலர் தமிழ்ச்செல்வன் மீது வாகனத்தை மோதி கொலை செய்ய முயற்சித்த வழக்கில் நேற்று மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவ்வழக்கில்தொடர்புடைய அஜித்குமார் மற்றும் சஞ்சய் பாலா ஆகிய இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

News September 18, 2024

அரியலூர் காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை

image

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் தலைமையில் அதிரடி நடவடிக்கை எடுத்த குவாகம் காவல் ஆய்வாளர் திரு மணிவண்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் திரு ராஜவேல் தலைமையில் தனி படை போலீஸ் குழு சந்தேகத்துக்கிடமாக வந்த டாட்டா ஏசி வாகனத்தை நிறுத்த முயற்சித்த போலீசார் மீது மோதி கொலை முயற்சியில் ஈடுபட்ட நாகல்குழி சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியசிறையில் நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

News September 18, 2024

செந்துறை அருகே டவரில் ஏறி தற்கொலை முயற்சி

image

செந்துறை அருகே கீழமாளிகை கிராமத்தை சேர்ந்த ஆனந்த், ரேஸ் வண்டி ஓட்டி கிராமத்தின் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக எழுந்த புகாரின் மீது இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் நேற்று இரவு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று ஆனந்த் மீது தவறாக புகார் அளித்ததாகவும், தான் எந்த தவறும் செய்யவில்லை என கோரி செல்போன் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை முயற்சி செய்தார்.

News September 18, 2024

அரியலூரில் நெடுந்தூர ஓட்டப் போட்டிகள்

image

அரியலூர் மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டிக்கு இணையான நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் 29.09.2024 அன்று காலை 7.30 மணி அளவில் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தொடங்குகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் 29ஆம் தேதி காலை 6.00 மணிக்கு தங்கள் பெயரினை முன்பதிவு செய்து போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News September 18, 2024

ஜெயங்கொண்டம் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்

image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நாளை 18.09.2024 கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார் மாலை 04.30 மணியளவில் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெறவுள்ளார்கள் என மாவட்ட ஆட்சியரக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது இதனைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

News September 18, 2024

அரியலூரில் 40 மணி நேர பயிற்சி

image

சென்னை உயர்நீதிமன்ற ஆணைக்கிணங்க, அரியலூர் மாவட்ட சமரச மையம் சார்பில் வழக்கறிஞர்களுக்கு 40 மணி நேர பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. சமரச மையத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் இத்தகைய நிகழ்ச்சிகள் சிறப்பானதொரு மாற்றமாக திகழ்கிறது. அவற்றில் செலவு, காலதாமதம் ஆகிய இரண்டும் மிக முக்கிய மாற்றங்களாகும். பல்வேறு பிரச்சனைகளை பேசி தீர்வு காண முயல்வதை நம்மால் பார்க்க முடிகிறது என ஆட்சியர் கூறியுள்ளார்

News September 17, 2024

அரியலூர் ரயில்வே நிலையத்தில் சிறப்பு நிகழ்ச்சி

image

அரியலூர் ரயில்வே நிலையத்தில் நடத்தப்பட்ட ஷ்ரம்தான் நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் அரியலூர் ரயில் நிலைய குழு மற்றும் தன்னார்வலர்களின் முயற்சிகளை வெளிப்படுத்தும் போது, ​​அரியலூர் ரயில் நிலைய குழுவின் சமூக சேவை, தூய்மை மற்றும் குழுப்பணி ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பற்றி எடுத்துக்காட்டுகிறது. இ இந்த நிகழ்ச்சியில் அரியலூர் ரயில்வே துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

News September 17, 2024

அரியலூரில் ஊட்டசத்து விழிப்புணர்வு போட்டி

image

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், கிராமப்புறங்களில் வாழும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதியோர்கள் ஆகியோர்களுக்கு போதிய ஊட்டச்சத்து இல்லாமல் பலவித நோய்களுக்கு ஆளாகின்றனர். இவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள் ஊராட்சி, வட்டார, மாவட்ட அளவில் நடைபெற உள்ளதாக கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News September 17, 2024

அரியலூரில் ரேஷன் கார்டு புதுப்பிப்பு பணி தொடக்கம்

image

ரேஷன் கார்டில் மொபைல் எண்ணை புதுப்பிப்பதற்கு நீங்கள் விண்ணப்பம் எழுதி அதனுடன் ஆதார்கார்டு மற்றும் ரேஷன்கார்டு நகல்களை இணைத்து தாலுகா அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். இதற்கு தனியாக விண்ணப்ப படிவங்கள் ஜெராக்ஸ் கடைகளில் கிடைக்கும். இந்த விண்ணப்ப படிவத்தில் 8 ரூபாய் ஸ்டாம்ப் கட்டாயம் ஒட்ட வேண்டும். மொபைல் எண் 24 மணி நேரத்தில் புதுப்பிக்கப்பட்டுவிடும். சில நேரங்களில் 2 நாட்கள் கூட ஆகலாம் என கூறினார்.

error: Content is protected !!