Ariyalur

News May 10, 2024

அரியலூர் முதலிடம்!

image

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 96.2% ஆக பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 95.07 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 97.46 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

News May 10, 2024

அரியலூர்: 97.31 % தேர்ச்சி பெற்று முதலிடம்

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் 97.31 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 96.41 %பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 98.26 % தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

News May 9, 2024

மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு பரிசு

image

அரியலூர் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்கள் உயர் கல்வியை தொடர சிறப்பாக பணியாற்றும் மாவட்ட ஒருங்கிணைந்த கல்வித்துறையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி கலந்து கொண்டார்.

News May 9, 2024

அரியலூர் மக்களுக்கு ஆட்சியர் அறிவுரை

image

அரியலூர் மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கோடைக்காலத்தில் பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்குமாறும், குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும் வெயிலின் தாக்கத்தால் உடல்நலக்குறைவு ஏற்படும் நிலையில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

News May 9, 2024

மின் விளக்குகளை சீரமைக்க கோரிக்கை

image

ஜெயங்கொண்டம் அருகே திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் குருவாளப்பர் கோவில் பகுதி சாலையில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள் இரவு நேரங்களில் எரிவதில்லை. இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், எனவே தெரு விளக்குகள் எறிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News May 8, 2024

அரியலூர் ஆட்சியர் ஆய்வு

image

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோடை வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சை பிரிவினை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மருத்துவக் கல்லூரியில் போதிய அடிப்படை வசதிகள் குறித்து கலந்தாய்வு செய்தார். ஆய்வில் சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News May 8, 2024

ஆண்டிமடம்: மின்சாரம் தாக்கி விவசாயி பலி

image

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த பெரியகிருஷ்ணாபுரம் மேலத் தெருவை சேர்ந்தவர் கண்ணப்பன் மகன் கருணாநிதி (55) விவசாயியான இவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள மோட்டாரை போடுவதற்காக மோட்டாரை அவர் தொட்டபோது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 8, 2024

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர அழைப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் கீழப்பழுரில் அமைந்துள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆர்வம் உள்ள மாணவ மாணவிகள் விண்ணப்பிக்க கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்நிலையில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர நேரிலோ அல்லது www.tnpoly.in என்ற இணையதளம் மூலமும் விண்ணப்பிக்கலாம் என்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 8, 2024

மே.10 இல் கல்லூரி கனவு 2024

image

12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான ‘கல்லூரிக் கனவு’ நிகழ்ச்சி அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதில் சிறந்த கல்வியாளர்கள் கலந்து கொண்டு 12ஆம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியியல், கலை அறிவியல், பொறியியல், அறிவியல் தொழில்நுட்ப பிரிவுகள் என்னென்ன படிப்புகள் உள்ளன என்பது தொடர்பாக விரிவான தகவல்களை மாணவ, மாணவியருக்கு வழங்க உள்ளனர். அரியலூரில் மே.10 இல் கல்லூரி கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

News May 8, 2024

மே தின பொதுக்கூட்டம்

image

அரியலூர் மாவட்டம் உட்கோட்டை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மே தினம் மற்றும் மறைந்த முருகேசன் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு சேகர் தலைமை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக மாநில குழு உறுப்பினராக வாலண்டினா, ஜெயசீலன் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மணிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.