India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
செந்துறை வேளாண் விரிவாக மையத்தின் செயல்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி இன்று ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட அளவில் மக்காச்சோளத்தில் உயர் விளைச்சல் பெற்ற செந்துறை பகுதியைச் சேர்ந்த விவசாயிகளை பாராட்டி பரிசுத்தொகைக்கான காசோலைகளை வழங்கினார். மேலும் பல்வேறு விவசாயிகளுக்கு நெல், சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு இடு பொருட்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் வேளாண் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
செந்துறையில் உள்ள தீயணைப்பு துறை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி ஆய்வு செய்தார். அப்போது இருக்கக்கூடிய தீயணைப்பு வாகனங்களின் எண்ணிக்கை, தீத்தடுப்பான் கருவிகள், இடர்பாடுகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான உபகரணங்கள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். ஆட்சியர் இதுவரை இவ்வருடத்தில் மேற்கொண்ட பணிகளின் விவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் 20ஆம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில் தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்ப பணியாளர்களை தேர்வு செய்வர். https://www.tnprivatejobs.tn.gov.in என்ற பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம். முகாமில் 30 வயதிற்கு மேற்பட்ட 10ஆம் வகுப்பு முதல் பட்டதாரி ஆண்கள் & பெண்கள் கலந்துகொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிசம்பர் 20 ஆம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே இம்முகாமில் கலந்து கொள்ள 18 வயது முதல் 35 வயது வரையிலான 10 ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை படித்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
கைவினைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை பெருக்கி, கைவினைஞர்களை தொழில் முனைவோர்களாக்கும் வகையில் கலைஞர் கைவினைத் திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.50,000 வரை மானியத்துடன் ரூ.3 லட்சம் வங்கிக் கடனுதவி வழங்கப்படும் வழங்கப்படும். பயன்பெற விரும்பும் கைவினை கலைஞர்கள் <
ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 20.12.2024 அன்று மாலை 4.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
அரியலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதுபோல் இன்று திங்கட்கிழமையும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மக்கள் தங்கள் சொந்த பிரச்சினை மற்றும் பொது சார்ந்த பிரச்சினைகளை மனு மூலம் அலுவலர்களுக்கு தெரிவிக்கலாம். இந்த குறைதீர் கூட்டமானது அங்கு உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
வாட்ஸ் ஆப் மற்றும் குறுந்செய்திகளில் வரும் SBI Rewards points பெற அல்லது SBI Aadhar update செய்ய இந்த APK files பதிவிறக்கம் செய்து தகவலை பூர்த்தி செய்யுங்கள் என்று வரும் எந்த ஒரு செய்தியும் நம்ப வேண்டாம். பதிவிறக்கம் செய்ய வேண்டாம். இந்த APK files பதிவிறக்கம் செய்வதன் மூலம் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் திருடப்படும் என்று அரியலூர் காவல்துறையினர் மக்களுக்கு இணையதளம் மூலம் அறிவுறுத்தியுள்ளனர்.
தா.பழூர் அருகே இடங்கண்ணி கிராமத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் தமிழக அரசின் சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கிளை செயலாளர் நாகரத்தினம் வரவேற்புரை ஆற்றினார். இதில் பாஸ்கரன், திருமேனி, சுபா.சந்திரசேகர், கலா சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர் இராமதுரைசூசைராஜ் சாமிதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் கொண்டனர்.
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், வாராந்திர சிறப்பு விசாரணை முகாம், மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராஜ் காவல் தலைமையில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்றது. இந்த சிறப்பு மனு விசாரணை முகாமில் 19 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் வாரந்தோறும் ஒவ்வொரு புதன்கிழமைகளிலும் நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.