Ariyalur

News October 28, 2024

188 மனுக்களுக்கு தீர்வு காண ஆட்சியர் உத்தரவு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெறும். அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுதிறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 188 மனுக்கள் பெறப்பட்டன.

News October 28, 2024

அரியலூர்: அரசு போக்குவரத்து கழக காலி பணியிடங்கள் 

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அரியலூர் மண்டலத்திற்கு ஓட்டுனர் உடன் நடத்துனர் பணி காலியிடம் நிரப்புதல் தொடர்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் 10.11.2024-க்குள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவிப்பு.

News October 28, 2024

அரியலூர்- ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் வாசித்தார், அனைத்து அரசு அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். இதில் அனைத்து துறை அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

News October 28, 2024

சாலை விபத்தில் பயிற்சி மருத்துவர் பலி

image

செந்துறை அண்ணாநகரை சேர்ந்தவர் மனோரஞ்சிதம். இவர் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வருகின்றார். இவர் செந்துறையில் இருந்து ஆர்.எஸ் மாத்தூர் சென்ற போது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு ஜீப்பின் பின்னால் மோதி பலத்த காயமடைந்தார். அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் சிகிச்சை பெற்ற நிலையில் மனோரஞ்சிதம் இன்று உயிரிழந்தார்.

News October 28, 2024

அரியலூரில் சாதி வன்கொடுமை: ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் சாதி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர் சார்பாக தகவல் தெரிவிப்போர், வழக்குப்பதிவு செய்தல் உள்ளிட்ட முறையீடுகளை 18002021989 அல்லது 14566 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களை பயன்படுத்தி தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 28, 2024

மறைந்த அனிதாவின் அண்ணன் பதிவு வைரல்

image

அரியலூரில் அனிதாவின் இறப்பின் போது வீட்டிற்கு வந்த Actor Vijay அண்ணா என்னிடம் சொன்ன அதே வார்த்தைகள் தான் இன்றும் சொல்லியிருக்கிறார். 2017இல் நிச்சயம் அவருக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இருந்திருக்க வாய்ப்பில்லை. தங்களின் ஆறுதலுக்கு என்றும் நன்றியை உரித்தாக்குகிறோம். தங்களின் அரசியல் நுழைவுக்கு வாழ்த்துகள் என அனிதாவின் அண்ணன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

News October 27, 2024

அரியலூர் மாவட்டத்திலிருந்து 252 வாகனங்கள் புறப்பாடு

image

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு இன்று மாலை நடைபெற உள்ளது. இதற்காக அரியலூர் நகர் பகுதியில் இருந்து தமிழக வெற்றிக்கழக மாநாட்டிற்கு இன்று மட்டும் 6 பஸ், 24 கார், 14 வேன்களில் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் புறப்பட்டு சென்றுள்ளனர். மேலும் மாவட்டத்தில் இருந்து கடந்த 3 நாட்களில் 252 வாகனங்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News October 27, 2024

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம், செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் 29ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயனடையுமாறு அரியலூர் மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 27, 2024

உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் பெறுவது கட்டாயம்

image

அரியலூர் மாவட்டத்தில் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் தற்காலிக இனிப்பு பலகார கடைகள் நடத்துபவர்கள் உணவு பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் தரமான பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்திட வேண்டும் என கலெக்டர் அலுவலகம் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News October 26, 2024

அரியலூர்- தகவல் தருபவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும்

image

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் கிராமங்களில் சந்தேகத்துக்குரிய நபர்கள் இருப்பதாக கண்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் கள்ளச்சாராயம், சட்டவிரோத மது, கஞ்சா, குட்கா மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிரான குற்றம் குறித்து 9489646744 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.