Ariyalur

News December 31, 2024

அரியலூர்- தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும் 03ம் தேதி சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது இதில் 50க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள்
9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்

News December 30, 2024

அரியலூர்- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியரின் புகைப்படத்தை முகப்புத்தோற்றமாக வைத்து, மாவட்ட ஆட்சியர் பெயருடன் +917726095149 என்ற எண்ணிலிருந்து வாட்ஸ்அப் கால், மெசேஜ் மூலமாக அரசு உயர் அலுவலர்களிடம் தொடர்பு கொள்வதாக கூறப்படுகிறது. இவ்வாறான பொய்யான அழைப்புகள் வந்தால் உடனே மாவட்ட நிர்வாகத்திற்கோ அல்லது காவல் நிலையத்திற்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News December 30, 2024

அரியலூர்-போலீசார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 

image

அரியலூர் அண்ணா சிலை அருகில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதை தமிழ்நாடு அரசை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன், முன்னாள் எம்பி இளவரசன் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள், தொண்டர்கள் என 432 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் சிறை வைத்தனர்.

News December 30, 2024

அரியலூர்: Way2News-ல் நிருபராக சேர விருப்பமா?

image

தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News செயலியில் அரியலூர் மாவட்டதின் உள்ளூர் செய்தியாளராக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட லிங்கில் <><இங்கே க்ளிக் செய்யவும்><<>> பதிவு செய்யவும். இதன் மூலம் உங்கள் ஊர் செய்திகளை பதிவிடுவது மட்டுமில்லாமல் கூடுதல் வருவாய் ஈட்டவும், இது ஒரு அறிய வாய்ப்பாக அமையும். மேலும் விவரங்களுக்கு +91 91603 22122 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

News December 30, 2024

அரியலூர்: மக்கள் குறைதீர் கூட்டம்

image

அரியலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (டிச.30) மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மக்கள் தங்கள் சொந்த பிரச்சினை மற்றும் பொது பிரச்சினைகளை மனு மூலம் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கலாம். இந்த குறைதீர் கூட்டமானது ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது

News December 30, 2024

அரியலூர் மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி நியமனம்

image

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளை, பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தின் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான தீபக் சிவாச், தற்போது அரியலூர் மாவட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

News December 29, 2024

செந்துறையில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்

image

அதிமுக சார்பில் செந்துறை ஒன்றியத்தில் அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி ‘யார் அந்த சார்’ என்ற போஸ்டர் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அரசியல் களம் சூடுபிடித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

News December 29, 2024

செந்துறை: 4 வழி சாலையை ஆய்வு செய்த அதிகாரிகள்

image

அரியலூர் (நெடுஞ்சாலை), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, கோட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள செந்துறை உட்கோட்டத்தை சார்ந்த அரியலூர் – ஜெயங்கொண்டம் (வழி) செந்துறை சாலையில் தலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இருவழிச்சாலையை நான்குவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளை இயக்குநர் சரவணன் ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும் செய்து விரைவில் முடிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கி மரக்கன்றுகள் நட்டார்.

News December 29, 2024

அரியலூரில் ஜன.5-இல் அறிஞர் அண்ணா மாரத்தான்

image

அரியலூர் மாவட்ட விளையாட்டு வளாகம் முன்பு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி ஜன.5-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது என ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இந்தப் போட்டிகள் 17 முதல் 25 வயதையுடைய ஆண்களுக்கு 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ தொலைவு ஆகும்.

News December 28, 2024

அரியலூர்- நெடுந்தூர ஓட்ட போட்டிகள்

image

அரியலூர் மாவட்ட அளவிலான நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் 5.01.2025 அன்று காலை 7.30 மணி அளவில் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து துவங்கி நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் வரும் 5.ம் தேதி காலை 6.00 மணிக்கு தங்கள் பெயரினை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!