India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் அம்பாபூர் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் அனைத்தும் பிடாரி ஏரியில் கலப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுற்றுப்புறங்களில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இவ்வூரில் பிடாரி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் கோழி இறைச்சி மற்றும் குப்பைகள் போன்ற கழிவுகளை கொட்டப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் உதவியாளரிடம் மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். அதில் வேலை நேரம். வேலைகளை முறைப்படுத்துதல் சம்பள உயர்வு உள்ளிட்டவை குறித்து வலியுறுத்தப்பட்டிருந்தது. இதில் மாநில உதவி செயலாளர் செல்வி. மாவட்ட செயலாளர் சங்கீதா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்.
ஜெயங்கொண்டம் பகுதியில் உள்ள சின்ன வளையம் மேம்பாலத்தில் இன்று(02/01/2025) இரவு சுமார் 7.30 மணியளவில் கார் மற்றும் இருசக்கர வாகன மோதிக்கொண்டதில் ஒருவர் பலியானார். மீன்சுருட்டி நோக்கி வேகமாக வந்த கார் தனது கட்டுப்பாட்டை இழந்து எதிரே உடையார்பாளையம் நோக்கி சென்ற இரு சக்கர வாகனம் மீது மோதியதில் பைக் பின்னால் அமர்ந்து வந்த ஒருவர் பலியானார். ஒருவர் உயிர் தப்பினார்.
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (ஜன.03) நடைபெற உள்ள சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 200க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வுசெய்ய உள்ளனர். diploma, Degree படித்த மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அரியலூர், உடையார் பாளையம், செந்துறை, ஆண்டிமடம் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் ஜனவரி 7ஆம் தேதி காலை 11:00 மணி முதல் மதியம் 2 மணி வரை சீர்மரபினர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறுகிறது. இதில் நல வாரியத்தில் உறுப்பினராக சேராத சிறுபான்மையினர் உரிய ஆவணங்களுடன் உறுப்பினராக சேர விண்ணப்பங்களை வழங்கலாம் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2024ஆம் ஆண்டில் கொலை, கொள்ளை, மது விற்பனை, மோசடி, பாலியல் குற்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மொத்தம் 34 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த 2023ஆம் ஆண்டில் இதேபோல் மொத்தம் 28 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியைச் சேர்ந்த மாதேஷ் (26) அவரது நண்பர்களுடன் சேர்ந்து டிச.31 இரவு புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் ரெட்டிப்பாளையம் பகுதியில் சென்ற போது வேகத்தடையில் நிலைதடுமாறி எதிரே வந்த லாரி மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் அனைத்து வழிபாட்டுத்தலங்கள், மசூதிகள், கிருஸ்தவ தேவாலயங்கள், முக்கிய வரலாற்று இடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு பணியினை தீவிரமாக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண மண்டபத்தில் சோதனை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வாகனம் ஓட்டுவது குறித்து பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பொது மக்களுக்கு இடையூறு மற்றும் விபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை ஓட்டுவது, பொது சாலையில் சாகசம் செய்வது, போக்குவரத்து விதி மீறல் சட்டப்படி குற்றமாகும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை குறித்து மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலையின் நடுவில் கேக்குகளை வெட்டுவது பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் நடந்து கொள்வதோ கூடாது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யாரும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.