Ariyalur

News June 18, 2024

விடுதிகள் உரிமம் பெற வேண்டும் – ஆட்சியர்

image

அரியலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கான விடுதிகள், பணிபுரியும் பெண்கள் விடுதிகள், பெண்களுக்கான இல்லங்கள்,சிறார் இல்லங்கள், பள்ளி குழந்தைகளுக்கான விடுதிகள், பள்ளியுடன் இணைந்து விடுதிகள் நடத்தும் நிறுவனங்கள் தமிழ்நாடு பெண்கள், குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் திட்டத்தில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாத விடுதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 18, 2024

அரியலூர்: மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

அரியலூர் ராஜாஜி நகர், கல்லூரி சாலையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று மின் நுகர்வோர் நாள் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் பங்கேற்று மின்சாரம் தொடர்பான குறைகளை மனுக்கள் மூலம் மேற்பார்வை பொறியாளரிடம் அளித்து பயனடையலாம் என அரியலூர் மின் துறை செயற்பொறியாளர் அய்யனார் தெரிவித்துள்ளார்.

News June 17, 2024

வீட்ளாயம்மன் கோவில் கும்பாபிஷேகம்

image

ஜெயங்கொண்டம், கண்டியங்கொல்லை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு வீட்ளாயம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. இதில் மங்கள இசை, நாதஸ்வரம் இசைக்க மங்கள நடைபெற்றது. பின்னர் பரிவாரங்களுடன் புனித தீர்த்தக்கடம் புறப்பட்டு  சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத புனித நீரானது விமான கலசத்தில் ஊற்றப்பட்டு தீபாராதணை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

News June 17, 2024

ஜெயங்கொண்டம்: குழந்தை மரணத்தில் திடீர் திருப்பம்

image

ஜெயங்கொண்டம் அருகே பிறந்து 38 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை கொன்ற தண்ணீர் பேரலில் மூழ்கடித்து கொன்ற குழந்தையின் தாத்தா வீரமுத்துவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குழந்தை சித்திரை மாதத்தில் பிறந்ததால் கடன் தொல்லை மற்றும் உயிருக்கு ஆபத்து என்ற மூட நம்பிக்கையில் கொலை செய்துவிட்டு நாடகமாடியது அம்பலமானது.

News June 17, 2024

ஜெயங்கொண்டம்: குழந்தையை கொன்ற குற்றவாளி கைது

image

ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சங்கீதா பாலமுருகன் தம்பதி. கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்களது குழந்தை தண்ணீரில் மூழ்கடிகத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில்,  போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சங்கீதாவின் தந்தை வீரமுத்து குழந்தையை கொலை செய்தது தெரியவந்தது. பின்னர், பேரனை கொன்ற தாத்தாவை போலீசார் கைது செய்தனர். 

News June 16, 2024

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.அதன்படி இன்று இரவு 7 மணி வரை அரியலூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News June 16, 2024

மது பாட்டில்கள் பறிமுதல்

image

அரியலூர் அடுத்த சிறுவளூர் கிராமத்திலுள்ள மேம்பாலத்தின் கீழ் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் மது விற்பனை செய்தவர் மது பாட்டிலை போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளார். இதில் 31 மது பாட்டில்கள், ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News June 15, 2024

பெண் சடலமாக மீட்பு

image

அரியலூர் அடுத்த பொய்யூர் கிராமத்தில் மருதையாற்றில் இன்று அடையாளம் தெரியாத பெண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக கிராம அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 15, 2024

அரியலூர்: ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி

image

தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் கும்பகோணம் கோட்டத்தில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோ மொபைல் பொறியியல் பிரிவில் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பை முடித்த இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. விண்ணப்பங்களை www.boat-srp.com என்ற இணையதளம் மூலமாக ஜூலை 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 14, 2024

ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி

image

தமிழக அரசின் கீழ் இயங்கும் தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் கும்பகோணம் கோட்டத்தில் ஓராண்டு தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோ மொபைல் பொறியியல் பிரிவில் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பை முடித்த இளைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. விண்ணப்பங்களை www.boat-srp.com என்ற இணையதளம் மூலமாக ஜூலை 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.