Ariyalur

News November 12, 2024

அரியலூர் மாவட்ட காவல்துறைக்கு புதிய மோப்ப நாய் குட்டி

image

அரியலூர் மாவட்ட காவல்துறையில் சேர்க்கப்பட்ட நாய்க்குட்டிக்கு திருச்சி மண்டல காவல் தலைவர் கார்த்திகேயன் மோனா என்று பெயர் சூட்டினார் இதில் திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் M.மனோகர் , அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர் மோனா-வை அரியலூர் மாவட்ட காவல்துறை மோப்ப நாய் பிரிவினர் தலைமை காவலர் செல்வகுமாரிடம் பயிற்சிக்காக அளிக்கப்பட்டது.

News November 11, 2024

அரியலூர்- மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள்

image

அரியலூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாளையொட்டி நவம்பர் 19 அன்றும், ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 20 அன்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற்று போட்டியில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 11, 2024

அரியலூர்- பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதவித்தொகை, இலவச வீட்டுமனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 309 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

News November 11, 2024

அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

image

அரியலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் உரிய ஆவணங்களுடன் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News November 10, 2024

அரியலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

News November 10, 2024

அரியலூர் மாணவர்களுக்கு இலவச பயிற்சி

image

பட்டயக் கணக்காளா், இடைநிலை நிறுவனச் செயலா், இடைநிலை செலவு மற்றும் மேலாண்மை கணக்காளா் ஆகிய போட்டித் தோ்வுகளுக்கு தாட்கோ மூலம் இலவசப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதில் தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகள் தாட்கோ மூலம் வழங்கப்படும். இதற்கு தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

News November 9, 2024

ஜெயங்கொண்டத்தில் 2 வயது சிறுமி மரணம்

image

ஜெயங்கொண்டத்தை அடுத்த இலையூர் மேலவெளி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் கனிஷ்கா (2). கனிஷ்கா தனது வீட்டின் அருகே விளையாடிய போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சிறுமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமியை மீட்ட அப்பகுதியினர் தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுமி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

News November 8, 2024

வீடு புகுந்து திருடும் கும்பல் – போலீஸ் அதிரடி

image

அரியலூர் மாவட்டம் செந்துறை மற்றும் குவாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குழுமூர், பெரியாக்குறிச்சி, இலுப்பையூர் மற்றும் இருங்களாகுறிச்சி கிராமங்களில் பகல் மற்றும் இரவு நேரத்தில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து, அவர்களிடமிருந்து 32 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை தனிப்படை போலீசார் மீட்டனர்.

News November 7, 2024

முதல்வா் மு.க.ஸ்டாலின் நவ. 15-ஆம் தேதி வருகை

image

அரியலூரில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவா், செஅரியலூா் மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடக்கி வைப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் நவ. 15-ஆம் தேதி வரவிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கர் தகவல் தெரிவித்தார். 

News November 7, 2024

அரியலூர்-ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 29ம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை 18ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2 பிரதிகளுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்

error: Content is protected !!