India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தஞ்சை பெருவுடையார் கோயிலைப் போலவே முதலாம் ராஜேந்திர சோழனால் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில் கட்டப்பட்டது. 560 அடி நீளமும் 320 அடி அகலமும் கொண்ட முற்றத்துடன் கூடிய உயர்ந்த மேடைமீது இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்திலேயே மிகப்பெரிய லிங்கம் கங்கை கொண்ட சோழபுரத்தில் தான் உள்ளது. உங்கள் ஊர் பெருமையை சேர் பண்ணுங்க.
அரியலூர் மாவட்டம் செந்துறை துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (18-01-2025) பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார். இதில் செந்துறை, பொன்பரப்பி, நல்லம்பாளையம், உஞ்சினி, குழுமூர், வங்காரம், நின்னியூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் வருவாய் வட்டத்தில் ஜன.22 காலை 9 மணி முதல் ஜன.23 காலை 9 மணி வரை நடைபெறும் முகாமில் பல்வேறு துறை சாா்ந்த மாவட்ட நிலை அலுவலா்கள் அரசின் அனைத்து நலத் திட்டங்கள், சேவைகள் குறித்து ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள உள்ளனா். மேலும், அன்றைய தினம் குறுவட்ட அளவில் பட்டா மாறுதல் முகாமும் நடைபெறுகிறது. மேலும் ஜன.22 மாலை 4.30 மணியளவில் அரியலூா் வட்டாட்சியரகத்தில், ஆட்சியரை சந்தித்து மனுக்களை அளிக்கலாம்.
அரியலூர் மாவட்டம், மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன் அடைந்த விண்ணப்பதாரர்களின் குழந்தைகளுக்கு 18-வயது நிறைவடைந்த குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் பயன் அடையாத நபர்கள் முதிர்வு தொகை பெற்று பயனடையும் விதத்தில் பயனாளிகள் சரியான ஆவணங்களை எடுத்துக்கொண்டு மாவட்ட சமூகநல அலுவலகத்தை நேரில் அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
பணியிடங்களில் 10-க்கும் மேற்ப்பட்ட நபர்கள் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை விசாரிப்பதற்கு உள்ள விசாரணை குழு (ICC Internal Compliant Committee) அமைத்தும் புகார் பெட்டிகள் வைக்கவும் அரசாங்கத்தின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே அரியலூர் மாவட்டத்தில் அனைத்து துறை தனியார் நிறுவனங்களும் உடனடியாக உள்ளக குழு அமைத்து புகார் பெட்டிகள் வைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
33/11KV செந்துறை துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான பொன்பரப்பி, குழுமூர், நின்னியூர், சோழன்குறிச்சி, அயன்தத்தனூர், வங்காரம், மரூதூர், மருவத்தூர், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, சாளையகுறிச்சி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனவும் பராமரிப்பு வேலை முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லரை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் திருவள்ளுவர் தினமான இன்று (ஜன.15) உலர் தினமாக அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். Share It
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் பா.வடிவேல் தலைமையில் செயலாளர் ஞானசேகரன், பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் அரியலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச்-ஐ நேரில் சந்தித்து காலண்டர் மற்றும் டைரி வழங்கி பொங்கல் வாழ்த்தை தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் குற்றம் சம்பவங்களை குறைக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் அரியலூர் மாவட்டம் முழுவதும் தினந்தோறும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (13.01.2025) ரோந்து பணி செல்லும் காவலர்களின் தொலைபேசி என்னை மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரியலூர் வட்டாரத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம், 22ம் தேதி காலை 9.00 மணி முதல் 23.01.2025 காலை 9.00 மணிவரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறைச் சார்ந்த மாவட்ட நிலை அலுவலர்கள் அரசின் அனைத்து நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள உள்ளனர். முகாம் நாளன்று குறுவட்ட அளவில் பட்டா மாற்ற முகாமும் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.