India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வெளியே செல்லும் போது கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்
திருமானூர் கொள்ளிட பாலத்தில் இன்று ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்ற இவர் யார் என்று தெரியவில்லை என்பதால் திருமானூர் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் திருமானூர் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அரியலூர் – திருச்சி புறவழி சாலையில் அஜித் நகர் அருகே உயர்மின் அழுத்த மின் கம்பத்தில் எதிர்பாராத விதமாக கார் மோதி மின்கம்பம் சேதமடைந்துள்ளது. மேலும் காரும் சேதமடைந்துள்ளது. இதனால் கூத்தூர் துணைமின் நிலையத்திலிருந்து மின்னோட்டம் பெறும் அரியலூரின் சில பகுதிகளுக்கு மின்தடை ஏற்பட்டுள்ளது. மின் கம்பத்தினை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
➤எளிதில் தீப்பற்றும் ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கக் கூடாது
➤கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், சங்கு சக்கரம்தானே என வீட்டுக்குள் வெடிக்கக் கூடாது
➤ வெடிகளை வெடிப்பதற்கு நீண்ட கைப்பிடி கொண்ட ஊதுவத்திகளைப் பயன்படுத்த வேண்டும்
➤ வாளியில் தண்ணீரை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்
➤ தீக்காயம் ஏற்பட்டால் சுயமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளாமல் மருத்துவமனையை உடனடியாக அணுக வேண்டும். SHAREIT
தென்னிந்திய கிழக்கு கடலோரப்பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தீபாவளியான நாளை திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே பொதுமக்கள் வெளியே செல்லும் போது கவனத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஷேர் செய்யவும்
அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் போட்டித்தேர்வுக்கு பயின்று வருகின்றனர். தற்போது நடைபெற்ற குரூப்-4 தேர்வில் 13 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று, பல்வேறு அரசு துறைகளில் பணியாற்ற தேர்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைக் குறைக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் அரியலூர் மாவட்டம் முழுவதும் தினந்தோறும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (29.10.2024) ரோந்து பணி செல்லும் காவலர்களின் தொலைபேசி என்னை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் சீர்மரபினர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையினை அதிகப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடர்பாக 07.11.2024 அன்று முற்பகல் 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை உறுப்பினர்கள் சேர்க்கை முகாம், அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் குறைதீர்ப்பு கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீமுஷ்ணம் அருகே மருங்கூர் கிராமத்தை சேர்ந்த பிரேமதாஸ் டிப்ளமோ படித்துள்ளார். இவர் ஆன்லைன் ரம்மி கடன் பிரச்சனையால் கடந்த 26 ஆம் தேதி சாவடி சேனாபள்ளம் என்ற இடத்தில் கலைக்கொல்லி மருந்தை சாப்பிட்டு கீழே கிடந்துள்ளார். இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அரியலூர், நொச்சிக்குளம் ஒப்பில்லாத அம்மன் கோவில் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உயிரிழந்து இருப்பதாக அரியலூர் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் 94981 05056 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHAREIT
Sorry, no posts matched your criteria.