India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு இயங்கி வரும் அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் தற்காலிக பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் https://ariyalur.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினைபதிவிறக்கம் செய்து 18ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கலெக்டர் அறிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக நேற்று முதல் இன்று காலை வரை 23.5 மி.மீ. மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக அரியலூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் 3 குடிசை வீடுகள் பகுதியளவும், 5 கட்டிட வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரப்பில் இன்று (டிச.04) தகவல் தரப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் முந்திரி பயிர் 30,000 ஹெக்டர் பரப்பளவில் பயிர் செய்யப்படுகிறது. தற்போது இந்தியா வேளாண் காப்பீட்டு நிறுனத்தினரால் முந்திரிக்கென்று தனியாக வானிலை சார்ந்த காப்பீடு திட்டத்தை (Sampoorna Ritu Kawach) அறிமுகப்படுத்தியுள்ளனர். காப்பீட்டு திட்டத்தில் சேர 07.12.2024 கடைசி நாள் எனவும் மேலும் இத்திட்டத்தில் பயன்பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று உலகம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை அனைவரும் அரவணைப்போம்,அவர்களுக்கு தேவையான உதவிகளையும், அவர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான முன்னேற்பாடுகளையும் செய்வோம் என்பதை வலியுறுத்துவதற்காக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளை பொதுமக்கள் அரவணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் நேற்று இரவு மாவட்ட ஆட்சியரகம் ஊதா நிறத்தில் ஒளிரூடப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று அரியலூர் 15 மில்லி மீட்டரும், செந்துறையில் 10.5 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் 25.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, குடிசை மற்றும் ஓட்டு வீடுகள் என 29 வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன.
அரியலூர் மாவட்ட அளவில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டத்தினை 06.12.2024 வெள்ளி கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்ட ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் நிர்வாக காரணங்களால் எதிர்வரும் 13.12.2024 வெள்ளிகிழமை அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெறும். அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் முதியோர் உதவி தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுதிறனாளி உதவிதொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 305 மனுக்கள் பெறப்பட்டன.
ஃபெஞ்சல் புயல் காரணமாக அரியலூர் மாவட்டத்தில் நேற்று இரவு வரை தொடர் மழை பெய்து வந்தது. இதனையொட்டி அரியலூர், திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக 8 குடிசை வீடுகள் பகுதியளவும், 4 காரை வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தரப்பில் தகவல் தரப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் முழுவதும் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அதிகபட்சமாக செந்துறையில் 38.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், அரியலூர் – 12 மிமீ, திருமானூர் – 6.6 மிமீ, குருவாடி – 10 மிமீ, சுத்தமல்லி – 0.9 மிமீ, ஆண்டிமடம் – 20.4 மிமீ, தா.பழூர் – 0.4 மிமீ, ஜெயங்கொண்டம் – 22.6, மிமீ என மொத்தம் 123 மிமீ மழை பதிவாகி உள்ளது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஃபெங்கள் புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் இதனால் அரியலூர் மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் ஒட்டி இருக்கும் கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். அவசரம் மற்றும் உதவி எண்கள்: 43291077. இந்த இலவச எண்ணில் அழைத்தால் தேவையான உதவி கிடைக்கும்.
Sorry, no posts matched your criteria.