Ariyalur

News December 9, 2024

382 கோரிக்கை மனுக்கள் பெற்ற பெற்ற மாவட்ட ஆட்சியர்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெறும். அதன்படி இன்று மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுதிறனாளி உதவிதொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 382 மனுக்கள் பெறப்பட்டன.

News December 9, 2024

அரியலூரில் அரையாண்டு தேர்வு இன்று தொடக்கம்

image

அரியலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரையாண்டு தேர்வு இன்று துவங்குகிறது. 6, 8, 10 மற்றும் 12 மாணவ -மாணவிகளுக்கு காலையிலும், 7, 9 மற்றும் 11 வகுப்புகளுக்கு மதியமும் தேர்வு நடக்கிறது. 10 ஆம் வகுப்பை தவிர ஏனைய வகுப்புகளுக்கு இன்று தமிழ் தேர்வு நடக்கிறது. 24ம் தேதி முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட உள்ளது என பள்ளி கல்வி துறையினர் தெரிவித்தனர்.

News December 9, 2024

அரியலூர் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

அரியலூா் விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாய இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் தெரிவித்தது: சிறு/குறு /பெண் விவசாயிகள் மற்றும் ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மானியமாக கருவியின் மொத்தவிலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.7000 வரை மானியமாக வழங்கப்படும். மேலும், விபரங்களுக்கு அரியலூர் உதவி செயற்பொறியாளா், வேளாண்மை துறை அலுவலகங்களை அணுகலாம்.

News December 8, 2024

அரியலூர்-முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நலத்திட்ட உதவி

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 45 முன்னாள் படைவீரர்கள் (ம) சார்ந்தோர்களுக்கு ரூ.11,00,000/- மதிப்பிலான நிதியுதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News December 8, 2024

ஜெயங்கொண்டம் ரேஷன் கடையை ஆய்வு செய்த கவுன்சிலர்

image

ஜெயங்கொண்டம் நகராட்சி 3வது வார்டு கீழக்குடியிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள நியாயவிலை கடையில் பொருட்கள் சரியான முறையில் அளவிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் முறையாக பொருட்கள் வழங்கப்படுகிறதா எனவும், மேலும் பயனாளர்களுக்கு குறைகள் உள்ளதா என நகர்மன்ற உறுப்பினர் ரங்கநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News December 7, 2024

அரியலூர்-முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நலத்திட்ட உதவி

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 45 முன்னாள் படைவீரர்கள் (ம) சார்ந்தோர்களுக்கு ரூ.11,00,000/- மதிப்பிலான நிதியுதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில்  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News December 7, 2024

அரியலூர்-கொடிநாள் வசூல் தொடக்கம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள் வசூல் பணியினை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி கொடிநாள் வசூல் உண்டியலில் நிதி அளித்து துவக்கி வைத்தார்;.
படைவீரர்களின் தன்னலமற்ற தியாகத்தை போற்றிடும் வகையில் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொடிநாள் வசூலில் தாராளமாக நிதி வழங்கவேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்

News December 7, 2024

அரியலூரில் அடையாளம் தெரியாத ஆண் உயிரிழப்பு

image

அரியலூர் நகராட்சிக்குட்பட்ட சிங்காரத்தெரு பங்களா ரோட்டில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் இன்று (05.12.24) மாலை இறந்த நிலையில் கிடக்கின்றார். மேற்படி நபர் இன்று காலையிலிருந்து அங்கும், இங்கும் நடந்து சென்றதாக கூறுகின்றனர். இது குறித்து அரியலூர் நகர காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் புகழேந்தி விசாரணை.

News December 7, 2024

அரியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை

image

அரியலூர் துணைமின் நிலையத்தில் 07.12.2024 சனிக்கிழமை இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் அரியலூர் துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான அரியலூர், வாலாஜா நகரம், கயர்லாபாத், அல்லிநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இல்லை என உதவி செயற்பொறியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

News December 6, 2024

அரியலூர்: 1.31 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

image

ஆதிதிராவிடர் பழங்குடியினர் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் வழங்கியதை தொடர்ந்து ஜெயங்கொண்டம் சுபம் மஹாலில் தலைவர் திரு.பொ. ரத்தினசாமி அவர்களின் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் தொல் திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!