India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று (டிச.30) மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மக்கள் தங்கள் சொந்த பிரச்சினை மற்றும் பொது பிரச்சினைகளை மனு மூலம் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கலாம். இந்த குறைதீர் கூட்டமானது ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளை, பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தின் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான தீபக் சிவாச், தற்போது அரியலூர் மாவட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக சார்பில் செந்துறை ஒன்றியத்தில் அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் விவகாரத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தி ‘யார் அந்த சார்’ என்ற போஸ்டர் நகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அரசியல் களம் சூடுபிடித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
அரியலூர் (நெடுஞ்சாலை), கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, கோட்டத்தின் கட்டுப்பாட்டிலுள்ள செந்துறை உட்கோட்டத்தை சார்ந்த அரியலூர் – ஜெயங்கொண்டம் (வழி) செந்துறை சாலையில் தலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் மூலம் இருவழிச்சாலையை நான்குவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகளை இயக்குநர் சரவணன் ஆய்வு செய்தார். பணிகளை தரமாகவும் செய்து விரைவில் முடிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கி மரக்கன்றுகள் நட்டார்.
அரியலூர் மாவட்ட விளையாட்டு வளாகம் முன்பு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி ஜன.5-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு நடைபெறுகிறது என ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இந்தப் போட்டிகள் 17 முதல் 25 வயதையுடைய ஆண்களுக்கு 8 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ தொலைவு ஆகும்.
அரியலூர் மாவட்ட அளவிலான நெடுந்தூர ஓட்டப்போட்டிகள் 5.01.2025 அன்று காலை 7.30 மணி அளவில் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இருந்து துவங்கி நடத்தப்பட உள்ளது. போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் வரும் 5.ம் தேதி காலை 6.00 மணிக்கு தங்கள் பெயரினை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி, தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி 4 தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும் 31.12.2024 அன்று காலை 10.00 மணியளவில் துவங்கப்பட உள்ளது. இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் அதிக அளவிலான மாணவ / மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் அறிவுரை செய்தி வழங்கியுள்ளார். அதில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக ஏரி, குளங்கள் முழு கொள்ளளவில் நிரம்பியுள்ளன. தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டில் உள்ள தங்களது குழந்தைகளை ஆறு, ஏரி, குளங்களுக்கு ஆகியவற்றுக்கு செல்லாதவாறு பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அரியலூர் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில், போதையில் அரசுப் பேருந்து கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தவர் கைது செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி ஜாகீர் உசேன்(27) மதுப் போதையில் இருந்து அங்கு நின்று கொண்டிருந்த விருத்தாசலம் அரசுப் பேருந்து கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்து சேதப்படுத்தினார். மேலும் அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
உடையார்பாளையத்தில் சுமார் ரூ.1.12 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நேற்று தொடங்கி வைக்கப்பட்டன. உடையார்பாளையம் உட்பட்ட வார்டு 14-இல் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சட்டப் பேரவை உறுப்பினர் கண்ணன், அங்கு தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.18 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்ட நியாய விலைக் கடையை திறந்து வைத்தார்.
Sorry, no posts matched your criteria.