India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் பா.வடிவேல் தலைமையில் செயலாளர் ஞானசேகரன், பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் அரியலூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச்-ஐ நேரில் சந்தித்து காலண்டர் மற்றும் டைரி வழங்கி பொங்கல் வாழ்த்தை தெரிவித்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் குற்றம் சம்பவங்களை குறைக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் அரியலூர் மாவட்டம் முழுவதும் தினந்தோறும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (13.01.2025) ரோந்து பணி செல்லும் காவலர்களின் தொலைபேசி என்னை மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
அரியலூர் வட்டாரத்தில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட முகாம், 22ம் தேதி காலை 9.00 மணி முதல் 23.01.2025 காலை 9.00 மணிவரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு துறைச் சார்ந்த மாவட்ட நிலை அலுவலர்கள் அரசின் அனைத்து நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள உள்ளனர். முகாம் நாளன்று குறுவட்ட அளவில் பட்டா மாற்ற முகாமும் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை நாளை (ஜன.14) கொண்டாடவுள்ள நிலையில் தொடர் விடுமுறையால் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள், பொருட்கள் வாங்க வந்தவர்கள் என ஏராளமானவர்கள் பேருந்துகளில் பயணித்தனர். இதனால் இன்றும் அரியலூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகின்றன. நகரங்களில் வாகனங்கள் ஊர்ந்தபடி செல்கிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளது. அரியலூரில் கடந்த மாதம் ரூ.1,000-க்கு விற்பனையான மல்லிகை பூ கிலோ ரூ.2500-க்கும், செவ்வந்திப்பூ கடந்தவாரம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 300-க்கு விற்கப்பட்ட காக்கரட்டான்
ரூ.1,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அஸ்தினாபுரம் கிராமத்தை சேர்ந்த கலியபெருமாள் என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 1 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை உயிரிழந்தவரின் மனைவியிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி இன்று வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பரிமளம் உடன் இருந்தார்.
உடையார்பாளையம் A.V.K. மகாலில் திருவள்ளுவர் தினத்தன்று மாணவர்களுக்குத் திருக்குறளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், திருக்குறள் முற்றோதல் நிகழ்வு தத்தனூரில் உள்ள தனியார் கல்லூரி சார்பில் நடைபெறுகிறது. இதில் 133மாணவர்கள் 133அதிகாரங்கள் குறித்து பேச இருக்கிறார்கள். மாவட்டத்தில் உள்ள ஆர்வமுடைய மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூரில் செந்துறை சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மருத்துவக்கல்லூரி நுழைவு வாயிலின் தென்பகுதியில் சாலையின் குறுக்கே வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக செல்வதினால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஏராளமான மக்கள் சிகிச்சை பெற மருத்துவமனை வருகின்றனர். இச்சாலையில் வேகத்தடை அமைக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளது .
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் பொங்கலின் முதல் நாளான இன்று போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். போகி என்றால் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கு ஏற்றவாறு பழைய பொருட்களை எரித்து, அருகில் இருக்கும் வீட்டாருக்கு போகியின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். குழந்தைகள் அதனை கண்டு மகிழ்ந்தனர்.
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஜன.14) கொண்டாடப்படவுள்ளதை அடுத்து தொடர் விடுமுறையால் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள், பொருட்கள் வாங்க வந்தவர்கள் என ஏராளமானவர்கள் பஸ்களில் பயணித்தனர். இதனால் நேற்று (ஜன.11) அரியலூர் பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதினர்.
Sorry, no posts matched your criteria.