Ariyalur

News January 24, 2025

அரியலூர்: போதுமான அளவு உரங்கள் கையிருப்பு

image

வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 3082 மெ.டன் யூரியா, 852 மெ.டன் டி.ஏ.பி 1023 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 1416 மெ.டன் காம்ப்ளக்ஸ் உரங்கள் அரசு தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது. இதுவரை சான்று பெற்ற நெல் விதைகள் 358.69 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 34.4 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 24, 2025

அரியலூர்: நெகிழி பொருட்கள் அப்புறப்படுத்தும் நிகழ்வு

image

அரியலூர் மாவட்டத்தில் நாளை (ஜன.25) மாபெரும் நெகிழி கழிவுகள் சேகரித்து அப்புறப்படுத்தும் நிகழ்வு நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள், தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவியர்கள் அனைவரும் கலந்துகொண்டு நெகிழி கழிவுகளை சேகரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

News January 24, 2025

அரியலூர்: விவசாயிகள் கலந்துகொள்ள கலெக்டர் அழைப்பு

image

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜனவரி 24 ஆம் தேதியான இன்று காலை 10 மணியளவில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

News January 24, 2025

Way2Newsல் அரியலூர் நிருபராக விருப்பமா?

image

Way2News Appல் அரியலூர் செய்தியாளராக விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து உங்களை பற்றிய தகவல்களை பதிவு செய்யவும். நீங்கள் பள்ளி,கல்லூரியில் பணிபுரிபவரா? அரசு அலுவலரா? சமூக ஆர்வலரா? உங்கள் வேலை, பகுதி சார்ந்த நிகழ்வுகளை செய்தியாக பதிவிட்டு வருவாய் ஈட்டுங்கள். மேலும் விவரங்களுக்கு +9195429 22022 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்ளவும். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

News January 23, 2025

அரியலூர் மாவட்ட பட்டதாரிகளுக்கு ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

image

அரசின் முக்கிய திட்டங்களை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட கண்காணிப்பில் முற்றிலும் தற்காலிகமாக இளம் வல்லுனராக பணியாற்ற, இளங்கலை பொறியியல் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் பட்டம் பெற்ற தகுதி வாய்ந்தோர் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முகவரி: புள்ளியியல் துணை இயக்குனர், மாவட்ட புள்ளியியல் அலுவலகம், அறை எண்: 203, 2ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

News January 23, 2025

அரியலூர் அருகே தந்தை மகன் கைது

image

உடையார்பாளையம் அருகே தவெக உறுப்பினரான தமிழரசனுக்கும், விசிக உறுப்பினரான இவர் அண்ணன் சரவணனுக்கும் வீட்டில் கட்சி கொடி ஏற்றுவதில் ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணமாக இருந்த வேல்முருகனை கேள்வி கேட்ட தமிழரசனை, சரமாரியாக வேல்முருகன் அவரது மகன் மணிகண்டன் தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த தமிழரசன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News January 22, 2025

அரியலூர்: இந்த பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது!

image

ஆண்டிமடம், பாப்பாக்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜன.23) ஆண்டிமடம், விளந்தை, கூவத்தூர், மேலநெடுவாய், பட்டினங்குறிச்சி, அழகாபுரம், மீன்சுருட்டி, அழகர்கோயில், வேம்புகுடி, முத்துசேர்வாமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. share it now

News January 21, 2025

அரியலூர்- ரயிலில் அடிபட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர் பலி

image

அரியலூர் அருகேயுள்ள பொட்டவெளி, நடுத் தெருவைச் சேர்ந்தவர் சரவணன்(40). சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர், இன்று வெள்ளூர் ரயில் நிலையம் அருகே மூடப்பட்டிருந்த கேட்டை கடந்து சென்ற போது, நிஜமுதீன் சம்பர் காந்தி விரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் ரயில்வே காவல் துறையினர், சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News January 21, 2025

அரியலூர் எஸ்பி பரிசுகள் வழங்கினார் 

image

அரியலூர் நகரில் உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 36 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப்போட்டி, பேச்சு போட்டி, நடன போட்டி, இசைப்போட்டி மற்றும் நாடக போட்டி உள்ளிட்டவைகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளை இன்று மாவட்ட எஸ்பி தீபக் சிவாச் தனது அலுவலகத்திற்கு அழைத்து பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

News January 21, 2025

அரியலூர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஜனவரி-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 24.01.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.கூட்டத்தில் முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!