India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ள பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதலுடன் www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்காக ரூ.3 லட்சம் அரசு மானியமும் வழங்கப்படும். எனவே அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். Share It Now…
தமிழ்நாடு முதலமைச்சர் மருந்துகள் குறைந்த விலையில் பொது மக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல் கட்டமாக 1000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்துள்ளார். இதனை ஒட்டி அரியலூர் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு ஆட்சியர் ரத்தினசாமி அறிவிப்பு.
தமிழக அரசால் வழங்கப்படும் திருநங்கையருக்கான முன்மாதிரி விருதை திருநங்கையர் தினமான ஏப்-15ம் தேதியன்று 1லட்சம் காசோலை, பாராட்டுச் சான்று போன்றவை வழங்கப்படும். திருநங்கைகள் இச்சமூகத்தில் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி தனது சொந்த முயற்சியில் படித்து தனித்திறமை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகள் (http://awards.tn.gov.in) என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் தினத்தை ஒட்டி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்பகம் அறிவுசார் குறைபாடுடைய மறுவாழ்வு இல்ல மாணவி சுமதிக்கு அரியலூர் மாவட்ட ஆட்சி தலைவர் ரத்தினசாமி வாக்காளர் அடையாள அட்டையினை வழங்கினார். நிகழ்ச்சியில் அன்பகம் அறிவுசார் குறைபாடுடைய மறுவாழ்வு இல்ல நிர்வாகிகள் மாற்றுத் திறனாளி நலத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் வாக்காளர் தின விழிப்புணர்வு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன இப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் வழங்கி பாராட்டினார். வாக்காளர் உரிமை குறித்து உறவினர்கள் நண்பர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் அவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
தேசிய வாக்காளர் தினம் மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான கோலம், மிண்ணனு வாக்குபதிவு செயல்முறை விளக்க குறும்படம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜன.25) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு விழிப்புணர்வு குறும்படம் மற்றும் கோலங்களைப் பார்வையிட்டார். இதில் அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
அரியலூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரியலூர் நகராட்சிக்குட்பட்ட சித்தேரி பகுதியில் இன்று (ஜன.25) காலை 9.00 மணியளவில் நெகிழி கழிவுகள் சேகரித்து அப்புறப்படுத்தும் நிகழ்வு மற்றும் நெகிழி கழிவுகளால் ஏற்படும் சுகாதாரக்கேடுகள் மற்றும் அதற்கு மாற்றாக பயன்படுத்தவேண்டிய சுற்றுசூழலுக்கு உகந்த மாற்றுப்பொருட்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்சி நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
EPFO மற்றும் இதர விதிகளின் படி முதலாளிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய ஜனவரி மாதத்திற்கான நிதி பயன்பாடு நிகழ்ச்சி நாளை மறுநாள் (ஜன.27) அரியலூர் ரெட்டிபாளையம் ஆதித்யா பிர்லா மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. இதில் ஓய்வூதியம் பெறுவோர்கள் பங்கேற்று தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் ஆயுஷ்குமார் திரிபாதி தெரிவித்துள்ளார். share it…
வாக்காளர் தினம் கொண்டாடவுள்ள நிலையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட உள்ளன. இதன் கீழ் அரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் நாளை தொடங்கி வைக்க உள்ளார். இதில் கல்லூரி மாணவ மாணவிகள் சுய உதவி குழு பெண்கள் கலந்து கொள்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.