India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வி.கைக்காட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் 2024 ஜூலை மாதம் வெளிநாடு செல்வதற்காக வெற்றிமணி என்பவரை அணுகியுள்ளனர். அப்போது வேலைக்கான விசா இருப்பதாக கூறியதால் ரூ.29,12,500 செலுத்தியுள்ளனர். இதனையடுத்து சரவணன் மற்றும் அவரது நண்பர்களுக்கு கொடுக்கப்பட்ட விசா போலி விசா என தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பிரசாந்த் என்பவரை போலீசார் நேற்று (ஜன.29) கைது செய்தனர்.
அரியலூர் வட்டாரத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் மாவட்ட நிலை அனைத்து துறை அலுவலர்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் சேவை மையங்களில் இன்று (ஜன.29) ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். ரேஷன் கடை, தாலுக்கா அலுவலகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு பணிகளை மேற்கொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில், பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது திருநங்கையர் தினமான ஏப்.15-ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெறுவதற்கு http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பிப்.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து, அது குறித்த விவரங்களை 2 கையேடுகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசால் திருநங்கையருக்கான முன்மாதிரி விருது திருநங்கையர் தினமான ஏப்ரல் 15ம் தேதியன்று ரூ.100000/- காசோலை மற்றும் பாராட்டுச் சான்று வழங்கப்படுகிறது. எனவே பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகள் (http://awards.tn.gov.in) என்ற இணையதள பக்கத்தில் 10.02.2025-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
உடையார்பாளையம் அருகே வெண்மான் கொண்டான் இளவரசன் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2022ம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கில் குற்றவாளி இளவரசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10000 அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி செல்வம் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு 4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், “சான்றுபெற்ற நெல் விதைகள் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் 198.69 மெட்ரிக் டன், தனியார் விதை விற்பனை மையங்கள் மூலம் 160 மெட்ரிக் டன் என மொத்தம் 358.69 மெட்ரிக் டன் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வேளாண்மை விரிவாக்க மையங்களில் 34.4 மெட்ரிக் டன் நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 336 மனுக்கள் மாவட்ட ஆட்சியரால் பெறப்பட்டு, மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் பல்துறை அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அறிவழகன் (49) மற்றும் சிவா (32) இருவர் மீது செந்துறை போலீசார் கடந்த டிசம்பர் 10-ந்தேதி அன்று இலைகடம்பூர் அருகே வழக்குரைஞர் ஒருவரை கொலை செய்ய முயன்றது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அறிவழகன் மற்றும் சிவா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவர்கள் இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அரியலூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜன.28) நடைபெற உள்ளது. இதனால் வடகீரனூர், அதியந்தல், ஜே.சீதாமூர், சௌரிபாளையம், மையனூர், இருதயம்பட்டு ஆகிய பகுதிகளிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது என்று மின் வரியம் அறிவித்துள்ளது. இந்த தகவலை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் பகிருங்கள்..
அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் குடியரசு தினமான இன்று (ஜன.26) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.