India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திங்கட்கிழமையான இன்று (பிப்.03) மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் மக்கள் தங்கள் சொந்த பிரச்சினை மற்றும் பொது பிரச்சினைகளை மனு மூலம் மாவட்ட ஆட்சியருக்கு தெரிவிக்கலாம். இந்த குறைதீர்வு கூட்டமானது ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை வங்கிக் கடனுதவியும், கடன் தொகையில் 30% மூலதன மானியமும், 3% வட்டி மானியமும் வழங்கப்படும். ஆகவே இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க..
அறியலூரை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். தகுதி வாய்ந்த முன்னாள் படைவீரர்கள் அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகல்வல்களுக்கு 04329 221011 என்ற எண்ணை தொடர்புக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். SHARE NOW!
அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆரம்பிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நூற்றாண்டு விழா மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் பள்ளி வளாகத்தில் இன்று நடைபெறுகிறது. இவ்விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட எஸ்பி தீபக் ஸ்வாச், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் சிறப்புரையாற்ற உள்ளனர். இவ்விழாவில் முன்னாள் தலைமை ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.
அரியலூர் மாவட்டம் தா பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மாதம்தோறும் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக தா பழூர், இடங்கண்ணி, தாதம்பேட்டை, கோடங்குடி, அணைகுடம், கோட்டியால், மைக்கேல் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என மின் உதவி செயற்பொறியாளர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில்; பாதுகாப்பு அலுவலர்,சிறப்பு சிறார் காவல் அலகில் 2 சமூகப்பணியாளர் தற்காலிக பணியிடத்திற்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை 14.02.2025 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் கிடைக்குமாறு அனுப்ப வேண்டுமென மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் இன்று நடைபெற்றது. அரியலூர் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் நடைபெற்ற வட்டார அளவிலான பயிற்சி முகாமில் கோழிக்குஞ்சுகளுக்கான தீவனம் வழங்கும் முறைகள் மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.
அரியலூா் வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள எள் பயிரின் இலைகளில் தோன்றியுள்ள சோகை நோயால் ஏற்படும் மகசூல் இழப்பைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து அரியலூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சாந்தி தெரிவித்துள்ளாா். 0.2 சதம் மாங்கனீசு சல்பேட் கரைசலை 3 முறை ஒரு வார கால இடைவெளியில் இலைவழி தெளிப்பாக தெளிக்கலாம் அல்லது ஏக்கருக்கு 4 கிலோ மாங்கனீசு சல்பேட்டை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் இட்டு அதிக மகசூல் பெறலாம்.
அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.எனவே சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்குமாறு தகவல்.
அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் முத்தமிழ்ச்செல்வன் முன்னிலையில் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.
Sorry, no posts matched your criteria.