India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இரவு 7 மணி வரை 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
பட்டயக் கணக்காளா், இடைநிலை நிறுவனச் செயலா், இடைநிலை செலவு மற்றும் மேலாண்மை கணக்காளா் ஆகிய போட்டித் தோ்வுகளுக்கு தாட்கோ மூலம் இலவசப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதில் தோ்வு செய்யப்படும் மாணவா்களுக்கு தங்குமிடம், உணவு வசதிகள் தாட்கோ மூலம் வழங்கப்படும். இதற்கு தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
ஜெயங்கொண்டத்தை அடுத்த இலையூர் மேலவெளி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் கனிஷ்கா (2). கனிஷ்கா தனது வீட்டின் அருகே விளையாடிய போது அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் சிறுமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமியை மீட்ட அப்பகுதியினர் தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், சிறுமி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அரியலூர் மாவட்டம் செந்துறை மற்றும் குவாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குழுமூர், பெரியாக்குறிச்சி, இலுப்பையூர் மற்றும் இருங்களாகுறிச்சி கிராமங்களில் பகல் மற்றும் இரவு நேரத்தில் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து, அவர்களிடமிருந்து 32 பவுன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை தனிப்படை போலீசார் மீட்டனர்.
அரியலூரில் உள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்ற திமுக செயல்வீரா்கள் கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவா், செஅரியலூா் மாவட்டத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடக்கி வைப்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் நவ. 15-ஆம் தேதி வரவிருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கர் தகவல் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம் வரும் 29ம் தேதி காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே ஓய்வூதியதாரர்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை 18ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2 பிரதிகளுடன் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்
செந்துறை அருகே குவாகம் கிராமத்தின் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். கோயில் அருகே உள்ள கொளஞ்சிநாதன் தரப்பினருக்குச் சொந்தமான 23 சென்ட் இடத்தை திருவிழா நடைபெறும் போது அப்பகுதி மக்கள் பயன்படுத்துவார்கள். மற்ற நாட்களில் கொளஞ்சிநாதன் தரப்பினர் பயன்படுத்தி வருவது வழக்கம். இந்நிலையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 81 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், 18 பேரை கைது செய்துள்ளனர்.
சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், ஜெயங்கொண்டம் சட்ட மன்ற தொகுதியில் மாதபுரம், காட்டாத்தூர் போன்ற பகுதிகளில் இன்று (05.11.2014) நியாயவிலை கடை, புதிய கட்டிடங்களை திறந்து வைக்கிறார். மேலும் செந்துறை ஒன்றியத்தில் சமுதாய கட்டிடங்களையும் திறந்து வைக்க உள்ளார் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அரியலூர் மாவட்ட சவகர் சிறுவர் மன்றம் சார்பாக, மாவட்ட அளவிலான குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் உள்ளிட்ட போட்டிகள் வரும் 10ஆம் தேதி காலை அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் வரும் 10ஆம் தேதி காலை 9.00 மணிக்கு அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பதிவு செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
கீழப்பழூரில் அமைந்துள்ள ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் சார்பில் இன்று (04.11.2024) முதல் இலவச தையல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் தொழில் தொடங்குவதற்கு கடன் உதவிகளும் பெற்று தரப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு 7539960190 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் மற்றும் அலுவலக நேரத்தில் அலுவலகத்தில் நேரில் வந்து விவரங்களை பெற்று செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.