India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டம் கீழக்கொளத்தூர் கிராமத்தில் வரும் ஏப்.14ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற உள்ளது. மேற்படி ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளவுள்ள மாடுகள் , மாடுபிடி வீரர்கள் , மாட்டின் உரிமையாளர்கள் ஆகியோரது விவரங்கள் ariyalur.nic.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு நிர்வாகி (Business Development Executive) பணிக்கான 20 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.25,000 வரையில் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் <
செந்துறை பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை நேற்று மாலை பெய்தநிலையில், சித்துடையார் கிராமத்தைச் சேர்ந்த இந்திராகாந்தி என்பவர் மாடு மேய்க்கும்போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்த தகவலின் பேரில் குவாகம் போலீசார் இந்திராகாந்தியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதிலும் இரவு நேரங்களில் மாவட்ட காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (ஏப்ரல் 3) இரவு ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவல் அதிகாரிகளின் விவரம் மற்றும் தொடர்பு எண்கள் அரியலூர் மாவட்ட காவல்துறையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே இந்த காமரசவல்லி கார்க்கோடேசுவரர் கோயில் உள்ளது. இது சுந்தரச் சோழனால் கட்டப்பட்ட கோயிலாகும். இக்கோயிலின் மூலவர்கள் கார்க்கோடேசுவரர் மற்றும் இறைவி பாலாம்பிகை ஆவார். நாகங்களின் அரசரான கார்க்கோடன் இறைவனை வழிபட்ட தலமாகும். இங்கு வழிபட்டால் திருமணத் தடை நீங்கி மனதிற்கு பிடித்த வரன் அமையும், மேலும் குழந்தை பேறு மற்றும் பிரிந்த தம்பதி மீண்டும் சேருவர். இதை பகிரவும்
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் சோலார் டெக்னிஷீயன் (Solar Technician) பணிக்கான 20 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.15,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய டெக்னிஷீயன்கள் <
அரியலூர் மாவட்டத்தில் குற்றம் சம்பவங்களை குறைக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் அரியலூர் மாவட்ட முழுவதும் தினந்தோறும் இரவு நேரங்களில் ரோந்து பணியில் காவலர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (02.04.2025) ரோந்து பணி செல்லும் காவலர்களின் தொலைபேசி எண்ணை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.
அரியலூர் அருகே அமைந்துள்ளது இந்த ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில். இது 1166 இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கோயிலாகும். சப்த ரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவர் தவம் செய்த இடமாக கருதப்படுகிறது. வயிற்றுவலி, கண்நோய் போன்ற பல்வேறு நோய்களிலிருந்து விடுபட இங்குள்ள மூலவரை வணங்கி செல்கின்றனர். மேலும் இங்கு வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறுகின்றனர். நண்பர்களுக்கு இதை பகிரவும்.
தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி முதல் வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 102 டிகிரி வெயில் பதிவானது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க..
அரியலூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஒப்பில்லாத அம்மன் கோயிலுக்கான தேரோட்டம் கடந்த 82 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. அதன் பின்னர் தேரோட்டம் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது தேரை புதுப்பிக்கும் பணி நடைபெற்று, வருகிற 7-ந் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தேர் மற்றும் தேரோடும் வீதிகளை ஆய்வு செய்தனர்.
Sorry, no posts matched your criteria.