Ariyalur

News August 30, 2024

அரியலூரில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

image

ஆண்டிமடம் அருகே கருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜன். இவரது சித்தப்பா சிங்காரவேல். இருவருக்கும் நிலம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 2020ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் சிங்காரவேலு மற்றும் அவரது மகன்கள் பழனிவேல், முருகவேல் ஆகியோர் தேவராஜனை கத்தியால் குத்தி கொலை செய்தனர். இது குறித்த விசாரணையில், வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி கிரிஸ்டோபர் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கினார்.

News August 29, 2024

செந்துறை அருகே சிமெண்ட் லாரி மோதி விபத்து

image

அரியலூர் செந்துறை அருகே சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி இன்று காலை விபத்துக்குள்ளானது. டால்மியா சிமெண்ட் நிறுவனத்திற்கு சொந்தமான சிமெண்ட் லாரி செந்துறை – ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற போது பொன்பரப்பி கிராமத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதியது. இதில் உயிர் சேதம் ஏதுமில்லை. இந்த சம்பவம் குறித்து செந்துறை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News August 29, 2024

அரியலூர் மாவட்டத்தில் இன்று மின்தடை

image

அரியலூர் மாவட்டத்தில் ஆண்டிமடம், பாப்பாக்குடி, ஓலையூர் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று நடைபெற உள்ளது. இதனால் கீழநெடுவாய். புக்குழி, சாத்தனப்பட்டு, அகரம், அழகாபுரம், சிலம்பூர், சிலுவைச்சேரி, நாகம்பந்தல், ஸ்ரீராமன், வீரபோகம், வங்குடி, இறவாங்குடி, பெரியாத்துக்குறிச்சி, ஓலையூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்வினியோகம் இருக்காது.

News August 28, 2024

அரியலூரில் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆட்சியர் ஆய்வு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பு அறையினை மாவட்ட ஆட்சித் தலைவர் பொ ரத்தினசாமி இன்று மேற்பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் பொது அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News August 28, 2024

அரியலூர் பகுதியில் இன்று மின்தடை

image

அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் துணை மின் நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக கிராமங்களான கீழப்பழூவூர், மேலப்பழூவூர், கோக்குடி, பூண்டி, வைப்பம், கருவடச்சேரி, கல்லக்குடி, அருங்கால், பொய்யூர், கீழவண்ணம் உள்ளிட்ட கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. இதனை தகவலை திருமானூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்தார்.

News August 28, 2024

மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க ஆட்சியர் அழைப்பு

image

நவராத்திரி கொலு பண்டிகையை முன்னிட்டு 21.09.2024 முதல் 06.10.2024 வரை மாநில அளவிலான நவராத்திரி விற்பனை கண்காட்சி சென்னையில் நடைபெறவுள்ளது. எனவே, மாவட்டத்தில் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் மாநில அளவிலான கண்காட்சியில் பங்கேற்க 10.09.2024-ம் தேதிக்குள் https://exhibition.mathibazzar.com./Login என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News August 27, 2024

அரசு பள்ளிகளில் விழிப்புணர்வு: கலெக்டர் தொடங்கி வைப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்ந்த திட்டங்கள் தொடர்பான அனைத்து விளம்பர பலகைகளுடன் விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று காலை 9.35 மணி அளவில் தொடங்கி வைத்தார். இந்த வாகனம் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் சென்று விழிப்புணர்வு செய்யும் வகையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

News August 27, 2024

அரியலூரில் ரூ.8.72 கோடி மதிப்பில் அரசு நலத்திட்டம்

image

அரியலூா் ஜெயங்கொண்டம் பகுதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் நேற்று தொடக்கி வைக்கப்பட்டது. இதில் லட்சம், நல்லனம் – ரூ.78.78 லட்சம், உட்கோட்டை- ரூ.1.21 கோடி, கல்லாத்தூா் -ரூ.1.26 கோடி, ரெட்டிதத்தூா் -ரூ.2.29 கோடி, அழகாபுரம் -ரூ.2.24 கோடி என மொத்தமாக ரூ.8.72 கோடி மதிப்பில் தாா் சாலைகள் அமைக்கும் பணிகளை அந்தந்த கிராமங்களில் தொடக்கி வைத்தாா்.

News August 26, 2024

அரியலூர் அரசு பள்ளி மாணவி தேர்வு

image

உடையார்பாளையம் அடுத்த பரணம் அரசு பள்ளியின் மாணவி அபிநயா நீட் தேர்வில் 540 மார்க் எடுத்து கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயிலுவதற்கு சேர்க்கை ஆணை பெற்றுள்ளார். அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ இட ஒதுக்கீட்டில் (7.5%) தேர்வாகி கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில இருக்கின்ற அபிநயாவிற்கு ஆசிரியர்கள் சக மாணவ மாணவியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

News August 26, 2024

கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

image

பெரியார், அண்ணா பிறந்தநாளையொட்டி அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி செப்.5,6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார். இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5,000, 2ஆம் பரிசு 3,000, 3ஆம் பரிசு ரூ.2,000 பரசு வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்க விரும்புவோர் பள்ளி தலைமை ஆசிரியர், கல்லூரி முதல்வரிடம் தெரிவிக்கலாம்.