India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க வாரந்தோறும் புதன்கிழமைகளில் அரியலூர் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறும். அதன்படி இன்று நடைப்பெற்ற முகாமில் மாவட்ட எஸ்பி தீபக் சிவாச் கலந்து கொண்டு 32 மனுதாரர்களை நேரில் அழைத்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதில் காவல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பிப்-14 நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தெரிவிக்குமாறு கலெக்டர் ரத்தினசாமி அறிவிப்பு.
அரியலூர் மாவட்ட முன்னாள், இன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப்ரவரி 12 ஆம் தேதியான இன்று மாலை 04 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே முன்னாள் இன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுகளை அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஜெயங்கொண்டம் அருகே வடக்கு புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்த பாலுசாமி-சங்கீதா தம்பதியின் இளைய மகள் ஸ்வேதா (18) கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தநிலையில், ஸ்வேதாவிற்கு தொடர்ச்சியாக வயிற்று வலி ஏற்பட்டதால், அவரை அவரது குடும்பத்தினர் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற நிலையில், ஸ்வேதா கடும் வயிற்று வலி காரணமாக நேற்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் வள்ளலார் நினைவு நாளினை முன்னிட்டு இன்று (11.02.2025) மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை, திருமானூர், மீன்சுருட்டி, தா பழூர், உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகள் மற்றும் கிராமப்புற பகுதிகளில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவசர உதவிக்கு போலீசாரின் கைபேசி எண் மாவட்ட காவல் அலுவலகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபானக்கூடங்கள் ஆகிய அனைத்திற்கும் வள்ளலார் நினைவு நாளினை முன்னிட்டு 11.02.2025 அன்று ஒருநாள் மட்டும் உலர்தினமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது என கலெக்டர் அறிவிப்பு.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைப்பெறும். அதன்படி இன்று நடைப்பெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தலைமையில் நடைப்பெற்றது. இதில் முதியோர் உதவி தொகை, இலவச வீட்டுமனை பட்டா, மாற்றுதிறனாளி உதவிதொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 222 மனுக்கள் பெறப்பட்டன.
அரியலூர் மாவட்டத்தில் 2024-25-ம் ஆண்டில் செயல்படுத்திய நிறுவனங்கள், அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்போர் நல சங்கங்கள், தனிநபர்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகளுக்கு ‘பசுமை சாம்பியன் விருது’ வழங்கப்பட உள்ளது என்றும், இதற்கான விண்ணப்பத்தை <
சீமான், தந்தை பெரியாரை தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சிப்பதை அரியலூர் மாவட்ட எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் வண்மையாக கண்டிக்கிறது. சமீப காலமாக சீமான் அரசியல் ரீதியாக முன்னுக்கு பின் முரணான வகையில் பேசிவருவதும்-தலைசிறந்த ஆளுமைகளை தரம்தாழ்ந்த வகையில் பேசுவதுமாக இருக்கிறார். இதனால் சீமானுக்கு எதிராக அரியலூர் மாவட்ட எழுத்தாளர் மற்றும் கலைஞர் சங்கம் தீர்மானம் நிறைவேற்றுவதாக கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.