India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கீழப்பழுவூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் civil engineering, mechanical engineering, EEE, ECE, CSE, வேளாண்மை பொறியியல் துறை ஆகிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக கல்லூரியில் 05.09.2024 மற்றும் 06.09.2024 ஆகிய தேதிகளில் விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம் என கல்லுரி முதல்வர் அறிவித்துள்ளார்.
செந்துறை அடுத்த சோழங்குடிக்காடு பட்டதாரி ஆசிரியர் மணிமுத்துக்கு சோழங்குடிக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் பல வருடங்களாக தொடர்ந்து 100% தேர்ச்சி, தனியார் பள்ளிக்கு இணையான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவருக்கு ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் பள்ளிக்கும் பெருமை சேர்த்த ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிகின்றனர்.
அரியலூர் அரசு கல்லூரியில் இந்திய ராணுவப் படையில் சேர்வதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில் திருச்சி ராணுவ ஆள் சேர்ப்பு, துணை அலுவலர் மேஜர் நீல்குமார் கலந்து கொண்டு பேசுகையில், இளைஞர்கள் அனைவரும் நமது நாட்டை பாதுகாக்கும் பணியில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும், 17 முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்களுக்கென்றே இந்திய அரசால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது தான் அக்னிவீர் திட்டம் என்றார்.
சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தையை காப்போம், கற்பிப்போம் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை சார்பில் இந்துமதி கலந்து கொண்டு, பெண் குழந்தைகளுக்கான நலத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் பெண் குழந்தைகளுக்கு உடல் ரீதியாக தொந்தரவு ஏற்படுத்தினால் 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
அரியலூர் மாவட்டம் விரகாலூர் கிராமத்திலிருந்து வெற்றியூர் செல்லும் போது சாலையில் உள்ள புளிய மரத்தில் இருந்த கதண்டு கடித்ததில் பொதுமக்கள், மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மரத்தில் உள்ள கதண்டை அகற்றுவதற்கு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் கதண்டுகளை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறை தீர்ப்பு நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதவித்தொகை, உதவி உபகரணம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி பெற்றுக்கொண்டார். மேலும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அரியலூர் மாவட்ட கூட்டுறவுத்துறை மூலம் எலந்தக்கூடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ.50,000 கடனுதவி மற்றும் இலுப்பையூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 07 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25,01,000 மதிப்பில் பயிர் கடனுதவிகளும் என மொத்தம் ரூ.25,51,000 மதிப்பிலான கடனுதவிகளையும் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வழங்கினார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 543 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
அரியலூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில் விற்கப்படும் நெல்லுக்கான விலை பற்றி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதில் ஏ கிரேடு நெல்லுக்கு மத்திய அரசின் ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ.2,320/- மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகை ரூ.130/- ஆகக்கூடுதல் தொகை ரூ.2,450/- ஆகும். குறைந்தபட்ச ஆதார விலை குவிண்டால் 1க்கு ரூ.2,300/- மாநில அரசின் ஊக்கத் தொகை ரூ.105/- ஆகக்கூடுதல் தொகை ரூ.2,405 என தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் கே.எம்.எஸ் குறுவை பருவத்தில் தளவாய், கூடலூர், ஏலாக்குறிச்சி, சன்னாசிநல்லூர், திருமழப்பாடி, கண்டிராதீர்த்தம் நமங்குணம், செங்கராயன்கட்டளை, குருவாடி, குலமாணிக்கம், மஞ்சமேடு, கா.மாத்தூர், ஓலையூர், காடுவெட்டி, அருள்மொழி, ஸ்ரீபுரந்தான், கோவிந்தபுத்தூர், தூத்தூர் உள்ளிட்ட 18 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.