Ariyalur

News February 18, 2025

அரியலூர்- மக்களுடன் முதல்வர் முகாம் ஒத்திவைப்பு

image

அரியலூர் மற்றும் தா.பழூர் வட்டாரங்களில் வரும் 20 மற்றும் 21ஆம் தேதிகளில், நடத்த திட்டமிடப்பட்டிருந்த மக்களுடன் முதல்வர் – மூன்றாம் கட்ட முகாம்கள் தவிர்க்க முடியாத ஒரு சில நிர்வாக காரணங்களினால் ஒத்தி வைக்கப்படுகின்றன. முகாம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் ஆண்டிமடம் செந்துறை வட்டாரங்களில் ஏற்கனவே அறிவித்த தேதிகளில் முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News February 18, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்ட தேதி அறிவிப்பு

image

அரியலூர் மாவட்டத்தில், பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது விவசாயம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி அறிவித்துள்ளார்.

News February 18, 2025

மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் அறிவிப்பு

image

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அரியலூர் கோட்டம் சார்பாக இன்று (பிப்.18) காலை 11 மணியளவில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் அரியலூர் ராஜாஜி நகர் காலேஜ் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது. எனவே இக்கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயனடையலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 17, 2025

“போதை பொருட்கள் இல்லா தமிழ்நாடு” செயலி- ஆட்சியரகத்தில் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டம் குறித்த புகார்களை, போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு செயலில் பதிவு செய்யும் செயலாக்கம் குறித்த கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News February 17, 2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அழைப்பு

image

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு பிப்ரவரி- 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21.02.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லன், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இந்த <>{லிங்கை}<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். 18-25வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்

News February 17, 2025

மின்சார வயரில் உரசியதில் சரக்கு வேன் எரிந்து சேதம்

image

அரியலூர் மாவட்டம், சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவருக்கு சொந்தமான சரக்கு வேனில் வைக்கோல்களை ஏற்றிக்கொண்டு, குணமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் பாதையில் குறுக்காக சென்ற மின்சார ஒயரில் வேனிலிருந்த வைக்கோல்கள் உரசியதில் தீப்பற்றி எரிய தொடங்கின. இதனால் வேனின் ஓட்டுநர் தீயை அணைப்பதற்கு முயன்றும் தீ மளமளவெனப் பரவி பற்றி எரிந்து வேன் முற்றிலுமாக எரிந்து சேதமானது.

News February 16, 2025

அரியலூர்: மருத்துவமனையை திறந்து வைத்த அமைச்சர்

image

அரியலூர் சின்னையன் புத்தகக் கடை உரிமையாளர் செங்குட்டுவன் அவர்களின் அரியலூர் கொளக்காநத்தம் சாலையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட “இராசி மருத்துவமனையை” இன்று (16-02-2025) போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி சிவசங்கர் திறந்து வைத்தார். இதில் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா, அரியலூர் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News February 16, 2025

அரியலூர்: ரூ.5,000 மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

image

ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடா் இறந்தால், ஈமச்சடங்குக்கு ரூ.5,000 மானியம் வழங்கப்படுகிறது. 2024-25 ஆண்டில், இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் மேற்கண்ட வகுப்பைச் சாா்ந்தவா்கள் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா்களிடம் இறப்புச் சான்றிதழ் பெற்று, ஈமச்சடங்கு உதவி பெறும் விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் அளித்து பயன்பெறலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

News February 15, 2025

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆட்சியர் ஆய்வு

image

உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, பிப்ரவரி 19, 20 ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் 19ஆம் தேதி செந்துறை வட்டாச்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து மனுக்கள் அளிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

error: Content is protected !!