India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டம், சலுப்பை கிராமத்தின் எல்லையில் பழங்கால யானை சுதை சிற்பம் ஒன்று உள்ளது. வெல்லம், கடுக்காய் மற்றும் சுண்ணாம்புக் கலவையால், சுட்ட செங்கற்களை கொண்டு 33 அடி நீளமும், 12 அடி அகலமும், 60 அடி உயரமும் கொண்ட அந்த யானை சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய யானை சுதை சிற்பமாக காட்சியளிக்கிறது. இந்த சுதை சிற்பத்தை தமிழக தொல்லியல் துறை புராதன சின்னமாக 2020ஆம் ஆண்டு அறிவித்துள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் 3-ம் கட்டமாக நாளை மறுநாள், 26 ஆம் தேதி ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமட்டம் ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெறயிருந்தது. ஆனால், மேற்கண்ட முகாம்கள் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு, முகாம்கள் நடத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல் வேறு வளர்ச்சித்திட்டங்களுக்கு முன்னேற்ற நிலை குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான விஜயலெட்சுமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் அரியலூர், கள்ளக்குறிச்சி சாலை சாஸ்திரி நகரில் உள்ள முதல்வர் மருந்தக மருந்து கிடங்கினையும் ஆய்வு செய்தார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் முன்னேற்ற நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் மு.விஜயலெட்சுமி தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி முன்னிலையில் நேற்று (21.02.2025) நடைபெற்றது.
அரியலூர் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க, வார விடுமுறை நாளான கடந்த ஜனவரி 10ஆம் தேதி, ரேஷன் கடைகள் செயல்பட்டன. இந்த வேலை நாளை ஈடுசெய்ய, இன்று (பிப்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று சனிக்கிழமை (பிப்.22) அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஷேர் பண்ணுங்க…
டேராடூனில் உள்ள இராஷ்ட்ரிய இராணுவ கல்லூரியில் எட்டாம் வகுப்பு பயிற்சிக்கு ஜனவரி-2026 மாதப் பருவத்தில் சேருவதற்கான ஜூன் 01ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்வுகள் சென்னையில் மட்டும் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பப் படிவம் தகவல் மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாட்கள் தொகுப்பை பெற www.rimc.gov.in எந்தக் கல்லூரி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு தேவையான 3641 மெ.டன் யூரியா, 1051 மெ.டன் டி.ஏ.பி 1014 மெ.டன் பொட்டாஷ் மற்றும் 2104 மெ.டன் காம்ப்ளக்ஸ் அரசு மற்றும் தனியார் உர விற்பனை மையங்களில் இருப்பில் உள்ளது. இதுவரை பெற்ற நெல் விதைகள் 360.84 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வேளாண்மை விரிவாக்க மையங்களில் 32.25 மெ.டன் நெல் விதைகள் கையிருப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உடையார்பாளையம் அருகே கச்சிபெருமாள் கிராமத்தில் வசந்தா என்பவரது வீட்டில் கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய 5 நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 37 பவுன் தங்க நகைகள், 430 கிராம் வெள்ளி, ரூ.40,000 பணம், மற்றும் திருட்டுக்கு உபயோகித்த கார் முதலியவற்றை போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்
அரியலூர், திருமானூர் மற்றும் தா.பழூர் தாலுகாக்களில் இன்று (பிப்.20) மற்றும் நாளை (பிப்.21) ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் 3-ஆம் கட்ட முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த முகாம்கள் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு, இந்த முகாம்கள் நடைபெறும் தேதி குறித்த விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜனவரி 2026 பருவத்தில் 8ஆம் வகுப்பில் மாணவர்கள் (சிறுவர் மற்றும் சிறுமியர்) சேர்வதற்கான தேர்வு வருகிற ஜூன் மாதம் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கு எப்படி விண்ணப்பிப்பது?, தகுதிகள், வயது வரம்பு என்ன? என்பது குறித்து <
Sorry, no posts matched your criteria.