Ariyalur

News September 10, 2024

அரியலூரில் சுய உதவி குழுக்களின் கண்காட்சி

image

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுய உதவி குழு பெண்கள் உற்பத்தி செய்த உணவு பொருட்கள், மதிப்பு கூட்டு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி இருந்தனர். இதனை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பார்வையிட்டு பாராட்டினார்.

News September 10, 2024

அரியலூரில் 30 கிலோ போதைப்பொருட்கள் அழிப்பு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி உத்தரவுப்படி, புகையிலை தடுப்பு ஒருங்கிணைப்பு குழுவினரால் வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு செய்யும் போது பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், உணவு பாதுகாப்புத்துறை சுகாதாரத்துறை, காவல்துறை, மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அரியலூர் மாவட்டம் முழுவதும் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு 30கிலோ போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன.

News September 9, 2024

உடையார்பாளையம் அருகே 1 லட்சம் நிவாரண நிதி

image

உடையார்பாளையம் வட்டம், பிராஞ்சேரி விழப்பள்ளம் கிராமத்தில் வசிக்கும், செல்வராஜ் என்பவரது மகன் ஆகாஷ் என்பவர் ஏரியில் நீரில் மூழ்கி உயிரிழந்ததை தொடர்ந்து முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்ட நிவாரணத்துக்கு ஒரு லட்சத்திற்கான காசோலை மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி பெற்றோர்களிடம் வழங்கினார்.

News September 9, 2024

அரியலூர்-மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 331 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

News September 9, 2024

அரியலூரில் மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கடன்

image

அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி அனிதா அரங்கத்தில், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 9,030 பயனாளிகளுக்கு ரூ.50.86 கோடி மதிப்பிலான கடன் இணைப்புகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் அவர்கள் வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பா, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

News September 9, 2024

அரியலூரில் உயர்வுக்கு படி’ திட்ட முகாம்: கலெக்டர் தொடங்கி வைப்பு

image

தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை சார்பில் 2023 மற்றும் 2024 கல்வி ஆண்டுகளில் 12 ஆம் வகுப்பு தோல்வியடைந்த, பள்ளிக்கு வராத அல்லது தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்காக ‘நான் முதல்வன் உயர்வுக்கு படி’ திட்ட முகாம், அரியலூர் கோட்டத்தில் உள்ள மாணவர்களுக்காக அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் இன்று நடைப்பெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தொடங்கி வைத்தார்.

News September 9, 2024

அரியலூரில் நான் முதல்வன் உயர்வுக்கு படி திட்டம் முகாம்

image

12-ம் வகுப்பு தோல்வியடைந்த, தேர்விற்கு அல்லது பள்ளிக்கு வராத அல்லது தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களுக்காக ‘நான் முதல்வன் உயர்வுக்கு படி’ என்ற திட்டம் கோட்ட அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் கோட்டத்தில், அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் கட்டமாக இன்றும் நடைபெற உள்ளது என்று மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News September 8, 2024

அரியலூர் மாணவர்களுக்கு அழைப்பு

image

12ஆம் வகுப்பு தோல்வியடைந்த/ உயர்கல்வி படிக்காத மாணவர்களுக்கு ‘நான் முதல்வன் உயர்வுக்குபடி’ என்ற திட்டம் மூலம், அரியலூர் அரசு கல்லூரியில் நாளை முதல் கட்ட பயிற்சியும், இரண்டாம் கட்டம் 19.09.2024 தேதியன்றும், தத்தனூர் மீனாட்சி கல்லூரியில் முதல் கட்டம் 12.09.2024 தேதியன்றும், இரண்டாம் கட்டம் 23.09.2024 தேதியன்றும் நடைபெறுகிறது. இதில் மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 8, 2024

அரியலூரில் தவெக நிர்வாகிகள் கொண்டாட்டம்

image

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி தமிழக வெற்றி கழகம் என்னும் அரசியல் கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தார். இதனை சட்டபூர்வமாக பரிசீலித்து இந்திய தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்ட கட்சியாக அனுமதி வழங்கி உள்ளது. இதனை ஒட்டி தமிழக வெற்றி கழகத்தின் அரியலூர் மாவட்ட தலைவர் சிவக்குமார் அவர்களின் தலைமையில் வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

News September 8, 2024

அரியலூரில் 30 பேருக்கு விருது

image

அரியலூர் மாவட்ட கலை மன்றம் சார்பாக 30 சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் 6 பேருக்கு கலை இளமணி விருதும், 6 பேருக்கு கலை வளர்மணி விருதும், 6 பேருக்கு கலை வளர்மணி விருதும், 6 பேருக்கு கலை நன்மணி விருதும், 6 பேருக்கு கலை முதுமணி விருதும் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட கலை மன்ற உதவி இயக்குனரும், செயலாளருமான செந்தில்குமார், இதர அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.