India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்ட கூட்டுறவு துறையின் மூலம் கடனுதவிகள் கலெக்டர் அலுவலகத்தில் இன்று வழங்க பப்பது. அதன்படி ஸ்ரீபுரந்தான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 05 பயனாளிகளுக்கு 4,84,800 ரூபாய் மதிப்பிலான பயிர் கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பொ.ரத்தினசாமி இன்று வழங்கினார். இதில் அரசு துறை அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரியலூர் மாவட்டத்தில் வாக்கு சாவடி மறு சீரமைப்பு முன்மொழிவுகளை இறுதி செய்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பொ. ரத்தினசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைப்பெற்றது. இதில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 11 வாக்கு சாவடி மையங்கள் கட்டிட மாற்றமும் 6 வாக்கு சாவடி மையங்கள் அமைவிட மாற்றமும் மற்றும் 9 பகுதிகள் மறு சீரமைக்கப்பட்டு உள்ளதாக அறிவித்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் டோராடுனில் உள்ள இராஷ்ட்ரிய ராணுவ கல்லூரியில் எட்டாம்வகுப்பு பயில ஜூலை மாதப்பருவத்தில் சேருவதற்கான தேர்வு டிச-1 நடைபெற உள்ளதால் அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார். தேர்வு சென்னையில் மட்டும் நடைபெற உள்ளதாகவும் எழுத்துத் தேர்வு நேர்முகத் தேர்வையும் கொண்டதாகவும் இருக்கும் என தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்குள் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளர்கள், காஸ் இஸ்திரி பெட்டிகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
கலை பண்பாட்டுத் துறை தமிழ்நாடு நாட்டு புறக் கலைஞர்கள் நலவாரியம் சார்பில் நலத்திட்ட உதவிகள் ஆட்சியரகத்தில் இன்று நடைப்பெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் ரத்தினசாமி தலைமையில் மூக்கு கண்ணாடி நிதியுதவி மற்றும் கல்வி நிதியுதவி என மொத்தம் 06 நபர்களுக்கு 1,02, 500 மதிப்பிலான காசோலைகளை வழங்கபட்டது. இதில் தமிழ்நாடு நாட்டு புறக் கலைஞர்கள் நலவாரிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மது கூடங்கள் மற்றும் எஃப் எல் 3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடம் ஆகிய அனைத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்படுவதாக ரத்தினசாமி இன்று தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அரியலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று பேசும்போது, தமிழ்நாடு அரசு பேருந்துகளில் கடந்த 24 மாதங்களில் மட்டும் 18.53 கோடி முறை மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதனால் இந்தியாவின் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. மேலும் மகளிருக்கான விடியல் பயணம் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
அரியலூர் மாவட்டத்தில் இன்று (செப்.15) ஞாயிற்றுக்கிழமை இன்று இரவு ரோந்து பணி செல்லும் காவல் துறை அதிகாரிகள் தொடர்பு எண்களை அரியலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் அவசர உதவிகளுக்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள எண்களை தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்துறை வட்டம், மாத்தூர் அருகே வெள்ளாற்றில் நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுக்க சென்ற காவல்துறையினர் மீது வாகனத்தை ஏற்றி கொல்ல முயற்சியில் ஈடுப்பட்டிருப்பது மாவட்டத்தில் பரபரப்பை ஏற்பட்டு உள்ளது. இதில் காயமடைந்த காவலர்களை மாவட்ட எஸ்.பி செல்வராஜ் அரசு மருத்துவக் கல்லூரியில் நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். மணல் கொள்ளையர்கள் பிடிக்க தனிப்படையை காவல்துறை அமைத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.