Ariyalur

News January 3, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்களின் விபரங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.2) இரவு 10 மணி முதல், இன்று(ஜன.3) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News January 2, 2026

அரியலூர்: திருமணத் தடை தீர்க்கும் நந்தி பகவான்

image

அரியலூர், திருமழபாடி என்ற ஊரில் அருள்மிகு வைத்தியநாதர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிறப்பு என்னவென்றால் நந்தி பகவானுக்கு இங்கு தான் திருமணம் நடைபெற்றது. இங்கு திருமணம் தடை இருப்பவர்கள், திருமணம் தாமதமாபவர்கள் எல்லாம் பங்குனி புனர்பூசம் அன்று நடைபெறும் நந்தியின் திருமணத்தை பார்த்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். மணமுடிக்காத உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.

News January 2, 2026

அரியலூர் மாவட்டத்தில் நாளை சிறப்பு முகாம்

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முதற்கட்ட பணிகள் நிறைவு பெற்றது. மேலும் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், பெயர் இடம் பெறாதவர்கள் தங்களது பெயரை சேர்த்து கொள்வதற்காக நாளை அரியலூர் மாவட்ட அணைத்து வாக்கு சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News January 2, 2026

அரியலூர்: தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருட்கள் வழங்கல்

image

அரியலூர் மாவட்டத்தில், 481 ரேஷன் கடைகளை சேர்ந்த 23288 குடும்ப அட்டைதாரர்களுக்கு, தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இம்மாதத்தில் 4, 5 ஆகிய தேதிகளில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News January 2, 2026

அரியலூர்: இலவச ஓட்டுநர் பயிற்சி

image

அரியலூர் மாவட்ட மக்களே, 2 மற்றும் 4 சக்கர வாகன பயிற்சி வகுப்பில் சேர, பணம் அதிகமாக செலவாகிறதா? இனி அந்த கவலையில்லை. தமிழக அரசின் TN skills என்ற இணையத்தளத்தில், பொதுமக்களுக்கு இலவசமாக வாகன பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கை கிளிக் செய்து<<>>, உங்கள் விவரங்களை பதிவு செய்தால் போதும். இதுபோன்று பயனுள்ள தகவலை, தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News January 2, 2026

அரியலூர்: சான்றிதழ் தொலைந்துவிட்டதா? Don’t Worry

image

அரியலூர் மக்களே சாதி சான்றிதழ், பிறப்பு/இறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் தொலைந்து விட்டால் இனிமே தாசில்தார் அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் வீட்டில் இருந்தபடியே உங்கள் மொபைல் போனிலே ஈஸியா டவுன்லோடு செய்துக்கொள்ளலாம். இந்த <>லிங்கில்<<>> சென்று உங்கள் சான்றிதழ் எண்ணை பதிவிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஷேர் செய்து மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்க!

News January 2, 2026

அரியலூர்: தங்கத்தை போலீசில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

image

செந்துறையில் அடகு கடை ஒன்றில் பணியாற்றி வருபவர் சந்திரசேகர். இவர் செந்துறை பஸ் நிலையத்தில் 1½ பவுன் தாலி சங்கிலியை கீழே கிடந்ததாக செந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதே நேரத்தில் தாலியை இழந்ததாக புகார் அளித்த இளமதி (35) என்பவரை போலீசார் அழைத்து, தாலியை மீண்டும் வழங்கினர். சந்திரசேகரின் இந்த நேர்மையான செயல் பொதுமக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.

News January 2, 2026

அரியலூர்: 22,000 பணியிடங்கள்.. ரயில்வே அறிவிப்பு

image

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), நாடு முழுவதும் காலியாக உள்ள குரூப் ‘D’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 22,000
3. வயது: 18 – 33
4. சம்பளம்: ரூ.18,000/-
5. கல்வித் தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.02.2026
7. விண்ணப்பிக்க: <>[CLICK HERE]<<>>
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 2, 2026

அரியலூர்: பொங்கல் பரிசு… முக்கிய அறிவிப்பு!

image

தமிழக அரசால் ஆண்டுதோறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அப்படி உங்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமில்லாமலோ அல்லது சரியாக வந்து சேரவில்லை என்றால் ‘1800 425 5901’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு அலைச்சல் இல்லாமல் உங்களால் புகாரை அளிக்க முடியும். மேலும் இந்த எண்ணின் மூலமாக ரேஷன் கடை மற்றும் ரேஷன் பொருட்கள் குறித்தும் நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 2, 2026

‘அரியலூர்’ பெயர் எப்படி வந்தது தெரியுமா?

image

‘ஹரியலூர்’ என்பதே காலப்போக்கில் ‘அரியலூர்’ என மாறியதாக கூறப்படுகிறது. அரி+இல்+ஊர் = அரியலூர்; அரி-விஷ்ணு, இல் உறைவிடம், ஊர்-பகுதி; பகவான் விஷ்ணு உறைவிடம் கொண்ட பகுதி என்பது இதன் பொருள். விஷ்ணு கோயில்கள் அதிகமாக உள்ளதாலும் இப்பெயர் வந்திருக்கலாம். மேலும், ‘அரியல்’ என்ற ஒருவகை பானத்தாலும் இப்பெயர் என சொல்லப்படுகிறது. இதுபோல உங்க ஊர பற்றி உங்களுக்கு வேறு பெயர்க்காரணம் தெரியுமா COMMENT பண்ணுங்க.

error: Content is protected !!