Ariyalur

News January 8, 2026

அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.7) இரவு 10 மணி முதல், இன்று(ஜன.8) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில், ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News January 8, 2026

அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.7) இரவு 10 மணி முதல், இன்று(ஜன.8) காலை 6 மணி வரை, ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில், ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

News January 7, 2026

அரியலூர்: திருமண தடையை நீக்கும் முக்கிய ஸ்தலம்!

image

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் அமைந்துள்ள, பயறணீஸ்வர ஆலயம் திருமணத்தடையை நீக்கும் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில், வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், திருமண தடை நீங்கி திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

News January 7, 2026

அரியலூர் தேமுதிக மாவட்ட செயலாளர் ஆய்வு

image

கடலூர் மாவட்டம் பாசாரில் ஜன.9 அன்று நடைபெற இருக்கின்ற மக்கள் உரிமை மீட்பு மாநாட்டின் திடல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. மேலும் மாநாட்டிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், இன்று(ஜன.7) தேமுதிக அரியலூர் மாவட்ட செயலாளர் ஜெயவேல் ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் அஜித், மாவட்ட துணை செயலாளர் பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் மாநாட்டின் பணிகளை குறித்து கேட்டறிந்தனர்.

News January 7, 2026

அரியலூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

அரியலூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

News January 7, 2026

அரியலூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்!

image

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அரியலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் ஜன.10-ம் தேதி (சனிக்கிழமை) அதிக மழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News January 7, 2026

அரியலூர்: 13வது நாளாக தொடர் போராட்டம்

image

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் 13வது நாளாக காத்திருப்பு போராட்டம் அரியலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக நடைபெற்று வருகிறது. இதில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 13வது நாளாக காத்திருப்பு சுமார் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News January 7, 2026

அரியலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

அரியலூர் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 7, 2026

அரியலூர்: பொங்கல் பரிசு வரலையா..? உடனே CALL!

image

அரியலூர் மக்களே, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேர்த்து ரூ.3000 பணத்தை, வரும் ஜன.13-ம் தேதிக்குள் அனைவருக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இதனை பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ அல்லது டோக்கன்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படாமல் இருந்தால், உடனே 1967 (அ) 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு நீங்கள் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 7, 2026

அரியலூர்: 3 நாட்களுக்கு சிறப்பு சேவை அறிவிப்பு

image

பாஸ்போர்ட் சம்மந்தப்பட்ட சேவைகள் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் இந்திய வெளியுறவு துறை பி.எஸ்.கே. மொபைல் வேன் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, அரியலூர் மாவட்ட பொதுமக்களின் தேவைக்காக இந்த வாகனம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஜன.8 (நாளை) முதல் ஜன.10-ம் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. இதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!