Ariyalur

News January 9, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.8) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.9) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் இத்தகவல் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 9, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில், நேற்று (ஜன.8) இரவு 10 மணி முதல், இன்று (ஜன.9) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் இத்தகவல் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News January 8, 2026

அரியலூர்: செல்வம் செழிக்க இங்க போங்க!

image

அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைத்துள்ளது. இக்கோயிலுக்கு சென்று வழிபடுவதால் செல்வம், குடும்ப நலன், திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, கடன் தொல்லை நீங்கி செல்வம் செழிக்க பலர் இங்கு பிரார்த்தனை செய்வதாக கூறப்படுகிறது. கடன் தொல்லையால் அவதிப்படும் உங்கள் நண்பர்களுக்கு இத்தகவலை SHARE பண்ணுங்க!

News January 8, 2026

அரியலூர்: சிலிண்டருக்கு கூடுதல் பணமா?

image

அரியலூர் மாவட்ட மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையை விட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ <>இணையதளத்தில்<<>> புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்த ஷேர் பண்ணுங்க!

News January 8, 2026

அரியலூர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

image

அரியலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <>parivahansewas.com<<>> என்ற இணையதளம் மூலமாக மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளம் மூலமாக LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை எளிதாக மேற்கொள்ளலாம். இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News January 8, 2026

அரியலூர்: ரூ.6.59 கோடி இணைய மோசடி

image

அரியலூர் மாவட்டத்தில், 2025-ம் ஆண்டு மாவட்டத்தில் 22 சைபர் கிரைம் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ரூ.6.59 கோடி இணைய மோசடி செய்யப்பட்டதில், ரூ.3.37 கோடி மதிப்பிலான பணம் வங்கி மூலம் முடக்கம் செய்யப்பட்டு, ரூ.1.04 கோடி மதிப்பிலான பணம் மீட்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் வழங்கப்பட்டதாக மாவட்ட காவல் துறை கூறியுள்ளது.

News January 8, 2026

அரியலூர்: இனி வங்கி செல்லவேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News January 8, 2026

அரியலூர்: 614 நபர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து

image

அரியலூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு மோட்டார் வாகன சட்டம் விதிமீறல் குற்றத்திற்காக 2,38,165 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மது அருந்திவிட்டு வாகனம் இயக்கிய குற்றத்திற்காக 4384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள், அதிவேகமாகவும் மற்றும் போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியவர்கள் 614 பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

News January 8, 2026

அரியலூர்: போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

அரியலூர் மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு <>இங்கு கிளிக் செய்து<<>>, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 8, 2026

அரியலூர்: பொங்கல் விழா குறித்து ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழகத்தில் பொங்கல் திருநாள் ஒவ்வொரு வருடமும் தை முதல் நாளன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் சுத்தம், சுகாதாரம் பேணும் விதத்திலும் மற்றும் சமத்துவத்தை கடைப்பிடிக்கும் விதமாக அரியலூர் மாவட்டத்தில் 201 கிராம ஊராட்சிகளிலும் பொங்கல் திருவிழாவானது “சமத்துவ சுகாதார பொங்கல் விழா” ஜன.14 அன்று சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!