Ariyalur

News January 10, 2026

அரியலூர்: 3212 மாணவர்கள் 18 மையங்களில் தேர்வு

image

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு(MMMS) ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்வில், இன்று 3,212 மாணவர்கள் 18 மையங்களில் தேர்வு எழுதினர். தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் வீதம் 12-ஆம் வகுப்பு முடிக்கும் வரை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

News January 10, 2026

அரியலூர்: பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000.. APPLY

image

அரியலூர் மக்களே.. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பெண் குழந்தைககள் கல்வி பயிலும் காலத்தில் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். தகுதி, தேவையான ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களை அறிய அரியலூர் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகலாம். SHARE பண்ணுங்க

News January 10, 2026

அரியலூர்: குரல் ஒப்புவித்தல் மற்றும் ஓவியப்போட்டி

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், குறள் வார விழா தொடர்பில், பொதுமக்களுக்கான குறள் ஒப்புவித்தல், குறள் ஓவியப்போட்டி, மாவட்ட சமூக நல அலுவலர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் குறள் ஒப்புவித்தல் போட்டியில் 21 பேரும்,
குறள் ஓவியப்போட்டியில் 20 பேர் என மொத்தம் 41 பேர் கலந்துகொண்டனர்.

News January 10, 2026

அரியலூர்: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

image

அரியலூர் மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News January 10, 2026

கங்கைகொண்ட சோழபுரத்தில் பொங்கல் கலை விழா

image

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வர் ஆலய வளாகத்தில் இம்மாதம் 15 மற்றும் 16-ம் தேதி இரண்டு நாட்கள் மாலை ஐந்து மணி முதல் 8 மணி வரை பொங்கல் கலை விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. அதன்படி கரகாட்டம், நையாண்டி மேளம், குதிரை ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News January 10, 2026

அரியலூர்: வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு

image

அரியலூர் மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளைப் பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற இங்கே <>கிளிக்<<>> செய்யவும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News January 10, 2026

வரலாற்றில் அரியலூர் மாவட்டம்!

image

அரியலூரில் பழங்கால மனிதர்கள் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. இதற்கு ஆதாரமாக நிண்ணியூர், ஓட்டகோவில், விளாங்குடி, விக்கிரமங்கலம், அரியலூர், கீழக்கொளத்தூர், ஏலாக்குறிச்சி, திருமழபாடி,குணமங்கலம், மேலப்பழுவூர், துளார் ஆகிய கிராமங்களில் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் பழைய கற்கால மற்றும் புதிய கற்கால கருவிகள், பெருங்கற்களாலான பாத்திரங்கள் ஆகியவை மிகவும் பழங்காலத்துடையதாக கருதப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News January 10, 2026

அரியலூர்: அரசுப் பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு

image

அரியலூர் மக்களே, பொங்கல் பண்டிக்கைக்கு வெளி ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு அரசுப் பேருந்துகள் மூலம் செல்ல உள்ளீர்களா? இத எண்களை நோட் பண்ணி வச்சிக்கோங்க!
1. பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் – 1800 599 1500
2. Luggage தொலைந்து போனால் – 044-49076326
3. ஓட்டுநர் / நடத்துநர் குறித்த புகார் – 1800 599 1500
4. இந்த தகவல் மற்றவர்களுக்கு பயன்பெற SHARE பண்ணுங்க!

News January 10, 2026

அரியலூர்: சடலமாக மீட்கப்பட்ட விவசாயி!

image

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே கொலையனூர் கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் விவசாயி சுந்தர்ராஜன் (70). இவர் மேலத்தெரு அருகே உள்ள தனது விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து வாழ்ந்து வந்துள்ளார். சம்பவத்தன்று காலை சுந்தர்ராஜன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது மகன் ராஜதுரை, விக்கிரமங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில், தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 10, 2026

அரியலூர் மாவட்டத்தில் 3 பேர் கைது!

image

உடையார்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, வேலப்பன் செட்டி ஏரிக்கரையில் நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்த செல்லையா (29), பிலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சேகர் (54) மற்றும் இளமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன் (26) ஆகியோர் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தனர். இதையடுத்து 3 பேர் மீதும் உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.

error: Content is protected !!