Ariyalur

News September 24, 2024

அரியலூரில் 224 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை

image

அரியலூர் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு முடித்து உயர்கல்வியில் சேராத மாணவர்களை உயர்கல்வி சேர்ப்பதற்கான உயர்வுக்கு படி முகாம் 4 கட்டங்களாக நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் 12 ஆம் வகுப்பு முடித்து உயர்கல்வியில் சேராத 224 மாணவர்கள் கலை மற்றும் அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக் உள்ளிட்ட பல்வேறு உயர்கல்வி சேர்வதற்கான சேர்க்கை நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News September 23, 2024

இயந்திரம் மூலம் பயணச்சீட்டு பெறும் திட்டம்

image

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் M. K. ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்குத் திட்டம் என்ற பாதையில், சுயசேவை இயந்திரம் (KIOSK SYSTEM) மூலமாக பேருந்துகளில் முன்பதிவு செய்யும் திட்டத்தை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

News September 23, 2024

அரியலூர் மாவட்ட காவல்துறையினர் அறிவிப்பு

image

சி.பி.ஐ. அதிகாரிகள் போல் நடித்து பண மோசடியில் ஈடுபடும் மோசடி நபர்களிடம் இருந்து ஜாக்கிரதையாக இருக்கும்படியும், அவர்களின் அழைப்பிற்கு பதில் அளிக்க வேண்டாம் எனவும் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்தால் இது குறித்து சைபர் காவல்துறையினரிடம் புகார் அளிக்கலாம் எனவும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News September 23, 2024

அரியலூர் கலெக்டர் அழைப்பு

image

அரியலூரில் இலவசத் தொழிற் பயிற்சி பெற விரும்புவோா் நோ்காணலில் கலந்து கொள்ள ஆட்சியா் பொ. ரத்தினசாமி அழைப்பு விடுத்துள்ளாா். கீழப்பழுவூா் பாரத ஸ்டேட் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனத்தில், ஏா்கூலா், பிரிட்ஜ் பழுது நீக்குதல், சிசிடிவி பொருத்துதல், எலக்ட்ரிக் மோட்டாா் ரீவைண்டிங் மற்றும் பழுது பாா்த்தல் உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக 30 நாள்கள் அளிக்கப்படுகின்றன.

News September 22, 2024

அரியலூர் மாவட்டத்தில் ரோந்து பணி செல்லும் காவலர்கள் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய ரோந்துப் பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

News September 22, 2024

அரியலூர் உணவு வழங்கல் பாதுகாப்பு துறை அறிவிப்பு

image

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தொடர்ந்து விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய”ரேஷன் கார்டு eKYC”-ஐ பூர்த்தி செய்வது மிகவும் முக்கியம் எனவும் செய்யவில்லை,எனில் ரேஷன் விநியோகத்தில் தடங்கல்கள் ஏற்படலாம்.ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களும் தங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) செயல்முறையை உங்கள் காலக்கெடு அக்டோபர் 31 தேதிக்குள்ள மாற்றி இருக்க வேண்டும் என அரியலூர் உணவு வழங்கல் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

News September 22, 2024

அரியலூர் ரோந்து பணி காவலர் விபரம்

image

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், அரியலூர் மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய ரோந்துப் பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

News September 21, 2024

அரியலூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு செப்டம்பர்- 2024 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27.09.2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News September 21, 2024

உடையார்பாளையத்தில் இருசக்கர வாகனம் மோதி ஒருவர் பலி

image

உடையார்பாளையம் அடுத்த எம்.ஆர்.சி அருகே திருச்சி சிதம்பரம் நெடுஞ்சாலையில் இன்று பொட்டங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் சாலையை கடக்கும் போது பின்புறம் வந்த குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டதில் சம்பவ இடத்திலேயே ராமலிங்கம் உயிரிழந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.