Ariyalur

News March 16, 2024

அரியலூர்: மகனால் தம்பதியினர் தற்கொலை!

image

அரியலூர்‌ நகரில் சடைய படையாட்சி தெருவை சேர்ந்தவர்‌ ராமசாமி, வளர்மதி தம்பதியினர். இவர்களின் மகன் இளமதி இவர் குடிக்க அடிக்கடி பணம் கேட்டு தாய் ,தந்தையை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் மனம் வெறுத்து போன தம்பதியினர் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை நேற்று குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.இதுகுறித்து அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 16, 2024

அரியலூர் மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணியிடங்கள்

image

அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 21 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!