Ariyalur

News October 4, 2024

அரியலூர் மக்களுக்கு கலெக்டர் அழைப்பு

image

அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாள் 07.10.2024 திங்கள் கிழமை மாலை 4.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடத்தப்படவுள்ளது.

News October 3, 2024

அரியலூர்- ராணுவ வீரர்களுக்கான குறைதீர்ப்பு நாள் கூட்டம்

image

அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் குடும்பத்தினர் மற்றும் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வரும் 7ம் தேதி மாலை 4.00 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கில் நடத்தப்படவுள்ளது. எனவே முன்னாள் படைவீரர் குடும்பத்தினர் தங்களது கோரிக்கையினை மனுவாக நேரில் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 3, 2024

அரியலூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

குறுஞ்செய்தி,சமூக வலைதளம், மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலம் வரும் கவர்ச்சிகரமான விளம்பரம் ஆகியவற்றை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், இயல்பை விட அதிகமான வருமானத்தை தருவதாகவும் ஏமாற்றும் முதலீட்டு வாய்ப்புகளை நம்பாதீர்கள் எனவும் இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் 1930 தொடர்பு கொள்ள வேண்டுமாறும், இது போன்ற மோசடிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அரியலூர் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

News October 3, 2024

அரியலூரில் 201 ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம்

image

காந்தி ஜெயந்தியையொட்டி அரியலூா் மாவட்டத்திலுள்ள 201 ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 2024-2025 – ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட பணி விவரம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், குலமாணிக்கம் கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, அரசின் திட்டங்கள் குறித்து விவாதித்தாா்.

News October 2, 2024

அரியலூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு

image

அரியலூர் அரசு பள்ளியில் வரும் 5ம் தேதி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 20000 பணி இடங்களை நிரப்ப உள்ளனர். எனவே 10ம் வகுப்பு முதல் உயர்கல்வி படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News October 2, 2024

அரியலூரில் சிறப்பு கிராம சபை கூட்டம்

image

நாட்டின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள 201 ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் தூய்மையே சேவை, கிராமத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருப்பது, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

News October 2, 2024

அரியலூர் அருகே பைக் மோதி ஒருவர் பலி

image

அரியலூர், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்கராயன் கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் பேச்சுமுத்து(75). விவசாயியான இவர் செங்கராயன் கட்டளை பகுதியில் நேற்று முன்தினம் இரவு சாலையில் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அதே கிராமத்தை சேர்ந்த கனகராஜ் (45) என்பவர் ஓட்டி வந்த பைக் பேச்சுமுத்து மீது மோதியது. இதில் பேச்சுமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 30, 2024

ஆண்டிமடம் அருகே சிறுமி கா்ப்பமாக்கிய இளைஞா் கைது

image

ஆண்டிமடம் அடுத்த சிலம்பூரை சோ்ந்தவா் கோகுல்ராஜ். கூலித் தொழிலாளியான இவா் 17 வயது சிறுமியை கடந்த 8 மாதங்களுக்கு முன் பாலியல் பலாத்காரம் செய்ததில் அவா் கா்ப்பிணியானாா். இந்நிலையில் அவரது பெற்றோா் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் துறையினா், கோகுல்ராஜை போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனா். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News September 29, 2024

அரியலூர் அருகே எலக்ட்ரீசியன் வெட்டி படுகொலை

image

விக்கிரமங்கலம் அருகே ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்த ரவிக்குமார் (45), எலக்ட்ரீசியன். நேற்று முன்தினம் இரவு டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்ற ரவியை, 2 நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து தப்பினர். பின்னர் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். முன்விரோத தகராறில் அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (30), கொளஞ்சி ஆகிய இருவரும் சேர்ந்து கொலை செய்தனர். விக்கிரமங்கலம் போலீசார் தமிழரசனை கைது செய்தனர்.

News September 29, 2024

அரியலூர் அருகே விசிகவினா் 53 போ் கைது

image

அரியலூா், ஆண்டிமடம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விசிகவினா் 53 போ் நேற்று கைது செய்யப்பட்டனா். அக்.2-இல் நடைபெறும் மாநாட்டை முன்னிட்டு, ஓலையூா் கிராமத்தில் பதாகை வைக்கப்பட்டிருந்தது. அதனை போலீசார் அகற்றினா். இதுகுறித்து போலீசாரை கண்டித்து ஜெயங்கொண்டம் 4 சாலை சந்திப்பில் மறியலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்குச்சென்ற போலீசார் மறியலில் ஈடுபட்ட 53 பேரையும் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.