Ariyalur

News April 13, 2024

அரியலூர்: கூண்டுகளில் சிக்காத சிறுத்தை

image

அரியலூர்,செந்துறை பகுதியில் வனத்துறையினரிடம் சிக்காமல் சிறுத்தை ஒன்று சுற்றி வருகிறது. நின்னியூர் கிராமத்தில் நேற்று சிறுத்தையின் கால்தடம் கண்டறியப்பட்டது.இதனால் அப்பகுதியில் அமைத்த 3 கூண்டுகளிலும் சிறுத்தை சிக்கவில்லை.கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.“சிறுத்தை தன் இடத்தை தேடி இடம்பெயர்ந்து வருகிறது”என அரியலூர் மாவட்ட வனத்துறை அலுவலர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்

News April 12, 2024

சிறுத்தையை பிடிக்க 22 இடங்களில் கேமரா

image

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதை காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர். சிறுத்தையை கண்டுபிடிக்க செந்துறை, பொன்பரப்பி, சிதளவாடி, உஞ்சினி, முந்திரி காடு ஆகிய 22 இடங்களில் கேமரா பொருத்தும் பணி தொடங்கியது. சிறுத்தையை பிடிக்க மயிலாடுதுறையில் இருந்து கூண்டுகள் வரவழைக்கப்பட்டுள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 12, 2024

அரியலூரில் சிறுத்தை பள்ளிகளுக்கு விடுமுறை

image

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரியலூரில் இன்று அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்குச் சென்ற அனைத்து மாணவர்களும் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க 63852 85485 என்ற வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.

News April 12, 2024

அரியலூரில் சிறுத்தை ஆட்சியர் எச்சரிக்கை

image

அரியலூர் செந்துறையில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில் கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும். கால்நடைகள் வைத்திருப்போர் அதனை பாதுகாப்பாக வைத்து கொள்ளவும்,பொதுமக்களின் பாதுக்காப்பை உறுதிபடுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஆட்சியர் அனிமேரி அறிவித்துள்ளார். சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க 63852 85485 என்ற வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.

News April 12, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு எச்சரிக்கை

image

அரியலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில்10 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News April 12, 2024

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம்

image

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர். செந்துறை அரசு மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது இரும்பு வேலியை சிறுத்தை தாவும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் இருந்த 4 காவலர்களும் சிறுத்தையை நேரில் பார்த்துள்ளனர். காவல் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News April 11, 2024

அரியலூர்: மக்களை வியப்பில் ஆழ்த்திய பேரணி

image

ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வினை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட வாகன விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இப்பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது .

News April 11, 2024

அரியலூர்:  திமுகவினர் பிரச்சாரம்

image

தா.பழூர் அருகே உதயநத்தம் ஊராட்சியில் விசிக தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். எம்எல்ஏ கண்ணன் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

News April 10, 2024

அரியலூரில் வலம் வரும் பானை சின்னம்

image

சிதம்பரம் மக்களவை தொகுதியில் விசிக தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.  பானை சின்னத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில், வில்லியனுாரைச் சேர்ந்த துரை என்ற சிற்ப கலைஞரால் பைபர் மூலம் 7 அடி உயரம், 6 அடி அகலம் கொண்ட ஆறு மெகா சைஸ் பானைகள் உருவாக்கப்பட்டு பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

News April 10, 2024

அரியலூர் ஆட்சியர் அதிரடி ஆய்வு

image

சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சிதம்பரம் மற்றும் குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி இன்று நடைபெற்றது. இதனை ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!