India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரியலூர் மாவட்டத்தில் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு நாளை(மே 5) நடைபெறுகிறது. அரியலூர் மான்போர்ட் பள்ளியில் 648 பேர், வெங்கட கிருஷ்ணாபுரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொதுப்பள்ளியில் 552 பேர், தாமரைக்குளம் ராம்கோ வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் 432 பேர், ரெட்டிப்பாளையம் ஆதித்ய பிர்லா பள்ளியில் 108 பேர், கருப்பூர் விநாயகா பொது பள்ளியில் 624 பேர் என மொத்தம் 2,364 மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
கடலூர் மாவட்டம் வடலூரில், வள்ளலார் சர்வதேச மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் சார்பில் இன்று மாலை 3 மணி அளவில் போராட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நாம் தமிழர் நிர்வாகிகள் கைது செயப்பட்டதால் இப்போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதில் அரியலூர் மாவட்ட செயலாளர் கப்பல் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோதண்டராமசாமி கோயிலில் தசாவதார மண்டபம் எனப்படும் 20 அடி உயரமுள்ள 10 தூண்கள் உள்ள நான்கு வரிசை கொண்ட பரந்த மண்டபம் கோயிலில் உள்ளது. இதில் 6.6 அடி உயரமுள்ள விஷ்ணுவின் 10 அவதாரங்கள் இத்தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. 90 அடி உயரமும் 6 அடுக்குகளும் உள்ள கோபுரம் முன்பகுதியில் உள்ளது. கோபுரத்தின் அடித்தளம் சுண்ணாம்பு கற்களாலும், மேற்பகுதி செங்கல் சுண்ணாம்புக்கலவையாலும் கட்டப்பட்டுள்ளது.
தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் அரியலூர் மாவட்ட, தாலுகா வாரி பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள்9642422022 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
அரியலூர் மாவட்டம் திருமானூரைச் சேர்ந்தவர் சாவித்திரி. இவர் தனியார் கடையில் வாங்கிய டி.வி. ஒரு சில நாட்களில் அது பழுதானதாக அந்நிறுவனம் மீது அரியலூர் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையிலான குழுவினர் டி.வி. தொகையுடன் சேர்த்து ரூ.10 ஆயிரம் இழப்பீடும் மேலும் வட்டியுடன் சேர்த்து வழக்கு செலவும் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சாமிதுரை தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்ற வெண்மான்கொண்டான் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன், அரியலூர் சாக்கோட்டை தெருவை சேர்ந்த தியாகராஜன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் இந்திரா நகரை சேர்ந்த பால விக்னேஷ் என்பவர் பழைய இரும்பு பிளாஸ்டிக் கடை வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய பழைய இரும்பு பிளாஸ்டிக் குடோனில் கழிவுகள் தனியாக சேமித்து வைத்துள்ளார். அதில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகை மூட்டமாக காணப்பட்டது.
சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரையுள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது எனவே தகுதியுள்ள நபர்கள் www.sdat.tn.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் வருகின்ற 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.இதில் கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து போன்ற விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் 18 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் மேலும் விவரங்களுக்கு 7401703499 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளாா்.
அரியலூரில் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு மே தினமான இன்று அரியலூர் நகராட்சி ஏஐடியுசி சுகாதார தொழிலாளர் சங்கம் சார்பாக ஏஐடியுசி கொடியை சங்க தலைவரும், உள்ளாட்சித் துறை சம்மேளன மாநில செயலாளருமான தண்டபாணி புது நகராட்சி அலுவலகம் முன்பும் கொடியேற்றினர்.
Sorry, no posts matched your criteria.