Ariyalur

News May 7, 2024

அரியலூர் மக்களுக்கு தர்பூசணி வழங்கிய அதிமுகவினர்

image

அரியலூர் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தலை கழக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் இன்று திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி மோர் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் தாமரை. ராஜேந்திரன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News May 7, 2024

மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

image

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியான நிலையில், விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு இன்று முதல் வருகின்ற 11 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். எனவே அரியலூர் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அரசு தேர்வு துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News May 7, 2024

அரியலூர் மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை

image

தமிழ்நாட்டில் தற்போது அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியசுக்கும் அதிமாக வெப்பம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் வெப்ப அலை விசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி இன்று அரியலூர் மாவட்டத்திற்கு வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News May 6, 2024

அரியலூர் மாவட்டம் 3வது இடம்

image

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் 97.25 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, அரியலூர் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. மேலும், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்கள் பலரும் தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

News May 6, 2024

அரியலூர் கலெக்டருக்கு குவியும் பாராட்டு

image

அரியலூர் மாவட்டத்தில் நடந்து முடிந்த +2 பொதுத்தேர்வில் 97.25 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தது. இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா சால்வை அணிவித்து பாராட்டினார்.

News May 6, 2024

அரியலூரில் 53 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

image

நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், அரியலூர் மாவட்டம் மாநில அளவில் 3 வது இடத்தை பெற்றுள்ளது. மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 97.25 ஆகும். மேலும் தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் அரசுப்பள்ளி – 23, அரசு உதவிபெறும் பள்ளி – 6, மெட்ரிக் பள்ளி – 15, சுயநிதி பள்ளி – 9 ஆக மொத்தம் 53 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

News May 6, 2024

அரசு பள்ளியில் 95.59 % தேர்ச்சி  

image

நடந்து முடிந்த +2 பொதுத்தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் 90 பள்ளிகளைச் சேர்ந்த 8218 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 3917 மாணவர்களும், 4301 மாணவிகளும் தேர்வு எழுதினர்.

54 அரசு பள்ளிகளில் 2323 மாணவர்களும், 2214 மாணவிகளும் என மொத்தம் 4537 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 2199 மாணவர்களும், 2138 மாணவிகளும் என மொத்தம் 4337 தேர்ச்சி பெற்றனர். அரசுப்பள்ளி தேர்ச்சி சதவீதம் 95.59 ஆகும்.

News May 6, 2024

அரியலூர் மாவட்டத்திற்கு ரிப்போர்ட்டர்கள் தேவை

image

தமிழில் முன்னனி Short News செயலியான Way2News-ல் அரியலூர் மாவட்ட, தாலுகா வாரியாக பகுதி நேரமாக பணியாற்ற செய்தியாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். விருப்பம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

News May 6, 2024

97.25 % பெற்று மாநிலத்தில் மூன்றாவது இடம்

image

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், அரியலூர் மாவட்டத்தில் 97.25 தேர்ச்சி விகிதம் பெற்று மாநிலத்தில் மூன்றாவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டம் குறைந்த அளிவிலான தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது.

News May 6, 2024

சுரங்கப் பாதை கேட்டு பொதுமக்கள் மனு

image

அரியலூர் ஜெயங்கொண்டம் அருகே விக்கிரவாண்டி – கும்பகோணம் பைபாஸ் சாலை அமைக்கும் பணி நடைபெறும் நிலையில் மயான சாலை அடைக்கப்பட்டது. இதையறிந்த அப்பகுதிமக்கள் பாதை அமைத்து தர மனு அளித்த நிலையில் அதற்கு அதிகாரிகள் மறுத்தனர். ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் பாதை அமைத்து தர வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோர் கோட்டாட்சியர் ஷிஜாவிடம் மனு அளித்தனர்.

error: Content is protected !!