Ariyalur

News March 21, 2024

அரியலூர் அருகே விபத்து: ஒருவர் பலி

image

அரியலூர் பெரியகற்கை கிராமத்தை சேர்ந்தவர் விஜயக்குமார். நேற்று(மார்ச்.20) ஆண்டிமடம் – விருத்தாச்சலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 21, 2024

தேர்தல்: நாம் தமிழர் வேட்பாளர்.

image

தமிழகம், புதுவையில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைத்து வேட்பாளர்களை அறிவிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சியின் (நாதக) சிதம்பரம் தொகுதி வேட்பாளராக இரா.ஜான்சி ராணி களம் காண்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 21, 2024

தேர்தல்: விண்ணப்பிக்க மார்ச் 24 கடைசி நாள்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19இல் நடைபெறவுள்ள நிலையில், முதியோர்கள் (85 வயதிற்கு மேற்பட்ட) / மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் தபால் வாக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பகுதி வாக்குச்சாவடி அலுவலரிடம் படிவம் 12D-ஐ பெற்று பூர்த்திசெய்து மார்ச் 24 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News March 20, 2024

அரியலூர்: பொது ஏலம் ஒத்திவைப்பு

image

அரியலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினரால், மது குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 50 இரண்டு சக்கர வாகனங்களை மார்ச் 21-ல் பொது ஏலம் நடைபெறும் என மாவட்ட காவல் துறை அறிவித்திருந்தது. ஆனால் மக்களவைத் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால், பொது ஏலம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News March 20, 2024

அரியலூர்: அதிமுக வேட்பாளராக சந்திரகாசன் அறிவிப்பு

image

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். இந்நிலையில் அதிமுக கட்சி சார்பில் அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் சந்திரகாசன் போட்டியிடுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

News March 20, 2024

அரியலூர் அருகே ஆட்சியர் ஆய்வு

image

அரியலூர் அருகே வாலாஜாநகரம் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்கு ஏதுவாக படிவம் 12 D வழங்குதல் பணியினை மாவட்ட ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்னா ஆய்வு செய்தார். பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி முதியவருக்கு படிவம் 12 D வழங்கினார். மேலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விடுபடாமல் படிவம் வழங்கிட அலுவலர்களை அறிவுறுத்தினார்.

News March 20, 2024

இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் திட்டம்

image

மாணவர்களிடம் விண்வெளி அறிவியல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் ‘யுவிகா’ இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை 2019ல் இஸ்ரோ அறிமுகம் செய்தது. இதன்கீழ் மாணவர்கள் விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல், செய்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்படும். இந்தாண்டுக்கான பயிற்சிக் காலம் மே 13 – 24. விண்ணப்பிக்க இன்றே(மார்ச் 20) கடைசி நாள். தகுதி: 9ம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே. விண்ணப்பிக்க: jigyasa.iirs.gov.in/yuvika

News March 19, 2024

அரியலூர்: சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது

image

அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த 18 வயதுடைய 2 சிறுவர்கள் நேற்று நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக பள்ளி முடிந்து திரும்பிய 16 வயது மாணவியை காதலிப்பதாக கூறி, சிறுவர்கள் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அச்சிறுமி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் 18 வயதுடைய சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், மற்றொரு 18 வயது சிறுவனை தேடி வருகின்றனர்.

News March 19, 2024

மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வட்டிக் கடை, அடகு கடைகள் மற்றும் அச்சக உரிமையாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆனி மேரி ஸ்வர்னா தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டிக் கடை, அடகு கடை, அச்சக உரிமையாளர்கள் தேர்தல் நடத்தை நெறி விதிகளுக்கு மாறாகவோ , சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது என கூறினார்

News March 19, 2024

புனித சூசையப்பர் திருவிழா

image

ஆண்டிமடம் ஒன்றியம் வரதராஜன்பேட்டை பங்கு ஆலயத்தில் புனித சூசையப்பர் திருவிழா திருப்பலி பங்குதந்தை, உதவி பங்குதந்தையால் நிறைவேற்றப்பட்டது. இத்திருவிழா திருப்பலியில் அருட்தந்தை புனி சூசையப்பர் பெயர் கொண்ட அனைவருக்கும் திருவிழா நல்வாழ்த்துக்கள் கூறினார்கள். பிறகு ஆலயமணி ஓசையோடுயும், மேள, தாள முழக்கங்களுடன் இறைமக்கள் பக்தியோடும் இருகரம் குவிக்க புனித சூசையப்பர் திருகொடியிரக்கப்பட்டது .

error: Content is protected !!