Ariyalur

News June 2, 2024

அரியலூரில் மாநில பிரச்சார இயக்கம் துவக்கம்

image

அரியலூர் பேருந்து நிலையம் அருகில் அரசு போக்குவரத்து, சாலை போக்குவரத்து மற்றும் ஆட்டோ போக்குவரத்து துறையில் சி.ஐ.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஜூன்-1 ஓட்டுனர் தினத்தை முன்னிட்டு மாநில பிரச்சார இயக்கம் துவங்கப்பட்டது. இதில் கிருஷ்ணன் சி.ஐ.டி.யூ தலைமை தாங்கினார். துரைசாமி சிற்றம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

News June 1, 2024

நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

image

தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் 30 கிமீ முதல் 40 கிமீ வரைலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று நள்ளிரவு 1 மணி வரை அரியலூர் மாவட்டத்தில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News June 1, 2024

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு 

image

அரியலூர் மாவட்டம் மீனாட்சி இராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கும் என்னும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கான எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் பணியில் ஈடுபடவுள்ள பணியாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து இன்று (1.6.2024) சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.

News June 1, 2024

அரியலூர்: அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள் பறிமுதல்

image

அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் அடுத்த நாயக்கர் பாளையத்தில் நேற்று(மே 31) அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெரிய திருக்கோணம் ICLக்கு சுண்ணாம்புக்கல் குவாரியிலிருந்து அளவுக்கு அதிகமான பாரம் ஏற்றி வந்த 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அரியலூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

News May 31, 2024

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

image

இராயம்புரம் அடுத்த ஆதிகுடிக்காடு கிராமத்தில் ஏரியை தூர்வார கோரியும், ராயம்புரம் கிராமத்தில் தொடர்ந்து குடிநீர் விநியோகம் செய்யக்கோரி பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராமநிர்வாக அலுவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

News May 30, 2024

அரியலூர் அருகே கோர விபத்து

image

ஆண்டிமடம் பெரியாத்துக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பச்சமுத்து மகன் சுனில் 3ம் வகுப்பு படித்து வருகிறான். சுனில் தனது பெரியப்பா வீட்டிற்கு சென்று விட்டு தனது வீட்டிற்கு விருத்தாச்சலம் to ஆண்டிமடம் ரோட்டில் நடந்து செல்லும் போது பின்னால் விருத்தாச்சலத்தில் இருந்து கும்பகோணம் சென்ற அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தார். ஆண்டிமடம் போலீசார் விசாரணை.

News May 30, 2024

அரியலூர் கலெக்டர் அதிரடி

image

ஆண்டிமடம் அருகே இலையூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் ரேஷன் அரிசியை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார், இவர் வெளியில் வந்தால் தொடர்ந்து ரேஷன் அரிசியை கடத்தும் செயலில் ஈடுபடுவார் என்பதால் இவரை தடுப்பு காவலில் வைக்க மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை எஸ்பி சுஜாதாவின் பரிந்துரையின் பேரில் திருச்சி மத்திய சிறையில் தடுப்புக் காவலில் வைத்திட அரியலூர் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

News May 30, 2024

சாலையை கடக்க முயன்றவர் மீது கார் மோதி விபத்து

image

சென்னையிலிருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற அக்பர் அலியின் கார் இருசக்கர வாகனத்தில் சென்ற செல்வராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 29, 2024

பெட்ரோல் குண்டு வீசியவர் கைது

image

நரசிங்கபாளையத்தை சேர்ந்தவர் பிரேம்குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அப்பெண் இவரிடம் பேசாமல் இருந்துள்ளார். ஊருக்கு செல்ல அப்பெண் பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது அங்கு வந்த பிரேம்குமார் அப்பெண்ணின் கவனத்தை ஈர்க்க சாலையில் பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். மீன்சுருட்டி போலீசார் பிரேம்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 29, 2024

ஜெயங்கொண்டம்: இன்றைய விலை நிலவரம்

image

ஜெயங்கொண்டத்தில் அமைந்துள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினசரி மார்க்கெட் நிலவரம் குறித்த விவரம் இன்று வெளியானது. நிலக்கடலை 80 கிலோ மூட்டை 7, 690 ரூபாயும், எள் 80 கிலோ மூட்டை 10,809 ரூபாயும் தேங்காய் பருப்பு 80 கிலோ மூட்டை 6277 ரூபாயும் புலி 100 கிலோ 3077 ரூபாயும் விலை நிர்ணயம் செய்து விவசாயிகளிடமிருந்து இன்று பெறப்பட்டது.

error: Content is protected !!