Ariyalur

News October 13, 2024

அரியலூர் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே பகிரவும்

News October 13, 2024

அரியலூரில் ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

image

அரியலூர் அருகே சுப்பராயபுரம் பகுதியில் ரயிலில் அடிப்பட்டு ஒருவர் இறந்து கிடப்பதாக விருத்தாசலம் ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இறந்து கிடந்தவர் யார் என விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தவர் பெரம்பலூர் மாவட்டம் சின்னவெண்மணி கிராமத்தை சேர்ந்த முத்துசாமி என்பது தெரிய வந்தது.

News October 12, 2024

அரியலூர் மாவட்டத்தில் மழை- எஸ்பி அலுவலகம் முக்கிய அறிவிப்பு

image

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி அரியலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையின் தீவிரம் காரணமாக ஏரி குளங்கள் ஆறுகள் முதலிய நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. எனவே குழந்தைகளை நீர் நிலைகளுக்கு விளையாட செல்ல அனுமதிக்காதீர்கள் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 12, 2024

ஆண்டிமடம் அருகே ஒருவர் பலி

image

ஆண்டிமடம் அருகே ராங்கியம் கிராமத்தைச் சேர்ந்தவர்் அன்பழகன். அரசு போக்குவரத்து கழக மேலாளர் வாகனம் மோதியதில் பலத்த காயத்துடன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி அன்பழகன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 12, 2024

அரியலூர் அருகே பைக் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு

image

உடையார்பாளையம் அடுத்த கச்சிப்பெருமாள் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பிலாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சாமுண்டி என்பவர் பைக்கில் சென்றபோது, சாலையின் குறுக்கே வந்த நபர்கள் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் போட்டதில் தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சடலத்தை மீட்ட போலீசார் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News October 11, 2024

ஆண்டிமடம் : அரசு வாகனம் மோதியதில் இருவர் பலத்த காயம்

image

ஆண்டிமடம் அருகே ராங்கியம் கிராமம் நெடுஞ்சாலையில் ராங்கியம் கிராமத்தை சார்ந்த அன்பழகன் மற்றும் கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் ஆண்டிமடத்திலிருந்து ராங்கியம் நோக்கி செல்லும் போது விருத்தாச்சலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற கார் மோதியதில் அன்பழகன் மற்றும் கிருஷ்ணசாமி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் இருவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News October 11, 2024

ஜெயங்கொண்டம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

image

ஜெயங்கொண்டம் அருகே நெல்லித்தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம், இவர் மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று இரவு இவரின் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 33 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மின்வாரிய அதிகாரி தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது நடந்துள்ள இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 11, 2024

விக்கிரமங்கலம் அருகே லாரி மோதி ஒருவர் பலி

image

அரியலூர், விக்கிரமங்கலம் அருகே வடக்கு நரியங்குழி சேர்ந்த நாகம்மாள் (81), மயிலாண்டன் கோட்டையில் உள்ள தனது பேத்தி வீட்டில் வசித்து வருகிறார். அருகே உள்ள உருவினார் வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முயன்ற போது சீமெண்ட் முட்டைகள் ஏற்றிவந்த லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து விக்ரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News October 10, 2024

அரியலூர்-மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற அழைப்பு

image

பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship Portal (https://scholarships.gov.in) இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

News October 10, 2024

அரியலூரில் 49,304 வாக்காளர்கள் இரட்டை பதிவு

image

அரியலூர் மாவட்டத்தில் ஒரு வாக்காளரின் பெயர் 1 க்கு அதிகமான இடங்களில் இடம் பெற்றிருப்பதை நீக்க ஏதுவாக, வாக்காளர்களின் பெயர் மற்றும் இதர விவரங்கள் ஒரே மாதிரியாக உள்ள 49,304 வாக்காளர்களின் பெயர்கள் இரட்டை பதிவாக இருப்பது கண்டறியப்பட்டது. இந்த வாக்காளர்களுக்கு அஞ்சல் மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட நபர்கள் தங்கள் முகவரி குறித்து கோட்டாட்சியர்களிடம் தெரிவிக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்